பக்கங்கள்

பித்தநிலை....
நமக்கான சருகுகளை
நாம் சேர்த்துகொண்டிருக்க
எங்கே சென்றாய் - திடீரென
என்னை விட்டு
சுள்ளிகளும் இல்லை
நெருப்பும் இல்லை
என்னதான் செய்வதோ
குளிரில் நான்...
கடற்கரையில் நாம் கட்டிய
மணல் வீடுகள் எங்கே ?
உனக்கு ஏதேனும்
நியாபகம் இருக்கிறதா?
மழைநீரில் விடுவதற்காய்
கப்பல்கள் செய்தோமே...
விட்டோமா? இல்லையா?
கவிழ்ந்ததா? சென்றதா?
நினைவிருக்கிறதா உனக்கு
கொஞ்சம் யோசித்துப்பார்...
என்னவாயிற்று எனக்கு
இன்று ஏன் இப்படி?
இதுவும் ஒரு பித்தநிலையா?
அண்ணா கேட்கிறாய நீ?
நமக்கான பாதைகள் - இன்று
நம்வசம் இல்லைதான்
இருந்தாலும் என்ன?
நினைவுகள் என்னுடன் தானே
தீட்டப்பட்ட ஓவியமாய்
எழுதப்பட்ட கவிதையாய்
கொஞ்சம் கண்ணீருடன்
கொஞ்சம் கவலைகளுடன் ....


-- பிரியா

3 கருத்துகள்: