பக்கங்கள்

பயணம்...நெடுந்தூரப் பயணம்
தொலைகின்ற நாட்கள்


எதிர்வரும் திருப்பம்
எதிர்பாரா காட்சி

சோலையோ பாலையோ
எதிர்வரலாம் ஏதாகிலும்

வருவது எதுவெனினும்
கடப்பது நாமே

பாதை நமக்கானது
பயணம் நம்முடையது

கடப்பது அரிதாகின்
பயணிப்பது எங்கனம்

தடைகளைத் தகர்த்தால்
தனிவழி உண்டு

கொஞ்சும் குளிரோ
கொளுத்தும் கோடையோ

பயணத் துணையாய்
ஏதாகிலும் ஒன்று

மார்கழிப் பணியில்
சூரியத் தோழன்

தகிக்கும் கோடையில்
கருமேகச் சாரல்

வேண்டுவது வேண்டாமை
முன்னும் பின்னும்

எத்தனை நெளிவுகள்
எத்தனை சுழிவுகள்

அத்தனையும் இருப்பது
வழிதேடும் முடிவுக்காய்!


--பிரியா


4 கருத்துகள்:

 1. பாதை நமக்கானது
  பயணம் நம்முடையது//
  வாழ்வும் நம்முடையதே அருமை.வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. ''..எத்தனை நெளிவுகள்
  எத்தனை சுழிவுகள்

  அத்தனையும் இருப்பது
  வழிதேடும் முடிவுக்காய்!...'''
  nanru. nal vaalththu....
  Vetha.Elangathilakam.

  பதிலளிநீக்கு