பக்கங்கள்

அதிகாலை...
எப்போதும் போலவே இப்போதும்
பூத்தது எழிலான காலை

சில்லென்றறைந்து  வணக்கம் சொல்லிற்று
சாளரம்வழி நுழைந்திட்ட காற்று

வாயிலிலே சென்றுதான் பார்க்கையிலே
வண்ணமலர்கள் பூத்துச் சிரித்தது

மெதுவாய் இரண்டடி நடந்து
மேலே நிமிர்ந்து பார்க்கையில்

படபடவென்று சிறகடித்து சென்றது
பட்டுக் காகம் பணிசெய்ய

குயிலொன்று கூவுது அங்கே
களிமிகுந்து காதல் கொண்டு

பசுவைத்தேடி ஓடுது கன்று
பசியாறும் நோக்கத் தோடு

புன்னகை ஒன்று பூத்திற்று
புதிதாய் எந்தன் முகத்தினிலே

ஆதவனும் அங்கே புன்னகைக்கிறான்
அனைத்தும் சரியாய் இருப்பதுகண்டு

அடடா! எத்துனை அழகு
அழகாய் புலரும் காலைப்பொழுது

10 கருத்துகள்:

 1. காலைப்பொழுதின் அழகெல்லாம்
  கள்ளமின்றி பேசுகின்ற மழலைபோலே
  கண்முன்னே வந்து போகிறது

  அருமை பிரியா

  வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  பதிலளிநீக்கு
 2. அதிகாலையில் எழுந்து சுற்றுப்புறத்தையு்ம் இயற்கையையும் ரசித்த விஷயங்களை அப்படியே கண்முன் நிறுத்தியது கவிதை! சூரியனும் புன்னகைக்கிறான் என்கிற அழகான கற்பனை கவிதைக்கழகு! கவிதாயினிக்கு பாராட்டும், வாழ்த்துகளும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி தங்களுடைய வாழ்த்துக்கும் பாராட்டுக்கும்... :)

   நீக்கு
 3. அடடா! எத்துனை அழகு
  அழகாய் புலரும் காலைப்பொழுது//
  கதிரவனும் சரி,காலையில்பூக்கும் மலரும் ,காத்தும் சுகமாய் இருக்கும்

  பதிலளிநீக்கு
 4. இந்த மதியப் பொழுதின்
  வெக்கையிலும் அந்தக் காலைப்பொழுதின்
  குளுமையை உணர முடிந்தது
  அருமையான கவிதை
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. புன்னகை ஒன்று பூத்திற்று
  புதிதாய் எந்தன் முகத்தினிலே

  ஆதவனும் அங்கே புன்னகைக்கிறான்
  அனைத்தும் சரியாய் இருப்பதுகண்டு...........

  அருமையான காலைப் பொழுது பிரியா
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு