பக்கங்கள்

அவளும்.....


அவளும் காதலிக்கிறாள்

கருப்பு வெள்ளை
கனவுகள் இல்லை

படபடத்து ஓடும்
பட்டாம்பூச்சிகள் இல்லை

கிறுக்கி முடித்திட்ட
கவிதைகள் இல்லை

ஆயினும் காதலிக்கிறாள்

ஒருவேளை,

அவளுக்கான கவிதைகள்
எழுதப்படாமல் இருக்ககூடும்

வண்ணத்திகள் பறந்திருக்ககூடும்
இன்னொருவர் காதலுக்காய்

கனவுகள் சென்றிருக்ககூடும்
வர்ணம் பூசுவதற்க்காய்

இருப்பினும் ,

அவளும் காதலிக்கிறாள்
அவளைப்போல், அவர்களைப்போல்


--பிரியா9 கருத்துகள்:

 1. இருப்பினும் ,

  அவளும் காதலிக்கிறாள்
  அவளைப்போல், அவர்களைப்போல்//

  ஈற்றடிகள் மிக மிக அருமை
  மனம் கவர்ந்த கவிதை
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. அருமையான படைப்பு
  அனைவருக்கும் போய்ச்ச்சேர
  தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி.... :)....தங்களை போன்றவர்களின் ஊக்குவிப்பே மேலும் மேலும் எழுத தூண்டுகிறது.. :)

   நீக்கு
 3. அவளுக்கான கவிதைகள்
  எழுதப்படாமல் இருக்ககூடும்
  சாத்தியமே....

  பதிலளிநீக்கு
 4. அனைத்து வரிகளும் என்னை கவர்ந்தன மிக அருமை

  பதிலளிநீக்கு
 5. அவளுக்கான கவிதைகள் எழுதப்படாமலே இருக்கக் கூடும். -ரசனை! அருமை!

  பதிலளிநீக்கு