பக்கங்கள்

கிழிகிறதா இந்தியாவின் முகமூடி?


பாரத நாடு பழம்பெரும் நாடென்றும்,நாகரீகத்தில் உலகோர்க்கு மூத்தோர் என்றும், அன்னை தேசமென்று வணங்கி பெண்களுக்கு மதிப்பளிக்கும் தேசமென்றும் உலகில் பரப்பிய (பொய் )உரைகள் அனைத்தும் மதிப்பழிந்து போய்க்கொண்டிருக்கின்றன அடுத்து அடுத்து வாசிக்கும் செய்திகளைப் பார்க்கையில்.

முதலாவது செய்தி மேற்கு வங்காளத்தின் கோல்கத்தா அருகிலுள்ள ஒரு பழங்குடியினர் பிரதேசத்தில், அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மற்றொரு சமூகத்தை சேர்ந்த ஆணுடன் காதல் கொண்டதால், அவருக்கு எதிராக காப் பஞ்சாயத்தில் விதிக்கப்பட்ட தண்டனைதான். அந்த ஆணுக்கு 50,000 ரூபாய் பெண்ணிருக்கு 25,000 ரூபாய் அபராதம் விதித்து, அந்த பெண்ணால் பணத்தை கட்ட முடியாத சூழ்நிலையில், அபராததிர்க்கு மாற்றாக அப்பெண்ணை 14 பேர் சேர்ந்து வல்லுறவுக்கு உட்படுத்தி உள்ளனர். இதற்க்கு பஞ்சாயத்தும் அந்த ஊர் பொதுமக்களும் ஆதரவு. அந்த 14 பேரில் அப்பெண்ணின் தந்தையின் வயதுடையவர்களும் அடக்கம் என்பது உச்சம். 

நம்முடைய சமூகம் எத்தகைய காட்டுமிராண்டி சமூகம் என்பதற்கு இதுவே பெரிய உதாரணம் அல்லவா. இது ஒன்று இது போல் எத்தனை சம்பவங்கள் சொல்லப்படாமல். இந்திய சமூகத்தின் கண்களில் காதல் ஏன் இத்தனை  பெரிய குற்றமாக கருதப்படுகிறது? காதலே குற்றமெனில் அதற்கான தண்டனை என்று இவர்கள் விதித்தது எத்தனை பெரிய கொடூரம். பெண் எப்பொழுதும் உடலாக மட்டுமே பார்க்கபடுகிராளா? அவளின் உடலை சிதைப்பதன் மூலம் எத்தகையொதொரு நீதியை இவர்கள் நிலைநாட்டி உள்ளார்கள். இது யாருக்கான நீதி? 

அடுத்தது தலைநகர் தில்லியில் ஆப்பிரிக்க பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. கறுப்பின பெண்கள் என்றாலே அவர்கள் விலை மாதர்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதியை  டெல்லி அமைச்சருக்கு சொல்லித்தந்தவர் யாரென்று  தெரியவில்லை. சாதி வெறி மட்டுமல்ல இந்தியர்கள் இனவெறியிலும் சலித்தவர்கள் அல்ல என்பதை அழகாக வெளிப்படுத்தி உள்ளனர் வெட்கம் கெட்ட டெல்லி அதிகாரிகள். தென்னிந்தியர்களின் இயல்பான நிறமும் கூட கருப்புதான். அப்பொழுது இவர்களுடைய பார்வையில் தென்னிந்திய பெண்களின் நிலை என்ன?  ஒரு நாட்டின் தலை நகரத்தில் உள்ளவர்களுக்கே மனித உரிமைகள் குறித்த எந்த ஒரு அறிவும் இல்லை என்பது இதன் மூலம் தெளிவாக வெளிப்படுகிறது. எப்பொழுதுதான் கற்றுக்கொள்ளப் போகிறோம் மனிதனின் இயல்பு அவர்களின் நிரத்தையோ  சமூகத்தையோ சார்ந்தது அல்ல என்பதை..


வடக்கில் மட்டும்தான் இப்படி, நம்மூரில்  அனைத்தும் அருமை என்று நினைக்க வேண்டாம். சில நாட்களுக்கு முன்பு காரைக்காலில் நடைபெற்ற  சம்பவம். ஆனால் அதில் பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக்கி அவளின் ஒழுக்கத்தை சந்தேகத்திற்கிடமாக்கி பிரச்சினையை முடித்தாயிற்று ( இதில் அப்பெண்ணின் ஒழுக்கத்தை குறித்து சொல்லப்பட்டவை அனைத்தும் பொய்யுரைகள் என்பது அவ்வழக்கை விசாரித்த பெண் போலிஸ் அதிகாரியின் வாக்குமூலம்). ஆனால் விஷயத்தை அப்படியே மூடி மறைத்தாயிற்று. 


இவர்களுக்கு ஒரு கேள்வி , ஒரு பெண் விலை மாதே ஆயினும் அவளின் அனுமதியின்றி அவளை தொடுவதற்க்கான உரிமையை யார் கொடுத்தது இவர்களுக்கு?  அனைத்து சமூக கேடுகளுக்கும் சீரழிவிற்க்கும் பழியாவது பெண் உடல் தானா? பெண் என்பவள் அத்தனை இலப்பமாக போய்விட்டாளா? அப்பெண்ணை விலை மாது என்று கூறி யாரென்று  தெரியாத அவளுடன் வல்லுறவு கொண்ட அந்த ஆண்களுக்கு என்ன பெயர்? வேற்று சமூகத்து ஆணை காதலித்த குற்றத்திற்காய் அவளை புணர்ந்த இந்த ஆண்களுக்கு என்ன பெயர்? இவர்களுக்கான தண்டனை என்ன? இங்கு ஒழுக்கம், பண்பாடு அனைத்தும் பெண்ணிற்கு மட்டும்தானா? ஆண்  அதற்க்கு கட்டுப்படமாட்டனா? எனில் அப்படியான ஆண்களை எதற்காக சமூகம் மதிக்க வேண்டும்? அவர்களுக்கு இந்த சமூகத்தில் எதற்கு ஒரு இடம்? 

20 கருத்துகள்:

  1. வணக்கம்

    என்ன கொடுமை.... இப்படிப்பட்டவர்களை.... சுருக்கு காயிறு தண்டனைதான் கொடுக்க வேண்டும்...
    நான் இன்று மலேசியாவில் மக்கள் ஓசை பத்திரிகையில் படித்தேன்...என்மனம் கனத்தது...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மொத்த சமூகத்திலிருந்தும் இந்த காட்டுமிரண்டிகளை ஒதுக்கி வைக்க வேண்டும்.... அதுவே அவர்களுக்கன தண்டனை

      நீக்கு
  2. பெண்ணை வல்லுறவாக்கும் ஆண்களின் பேசும், பார்க்கும் திறனை எடுத்திட்டு, நெத்தில இவன் காமுகன்னு பச்சை குத்தி விட்டுடனும். அப்பதான் அடுத்தவன் இதுப்போல தவறை செய்ய மாட்டான்

    பதிலளிநீக்கு
  3. மிகவும் வருந்த தக்க செய்தியே ! முன்பெல்லாம் மன்னர்கள் மாதம் மும்மாரி பொழிகிறதா என்று கேட்டு நாட்டின் வளமையை அறிந்து கொள்வார்களாம். ஆனால் இப்பொழுதோ மாதம் மூன்று வன்புணர்வாவது நடப்பது ஊடகத்தின் வாயிலாக நமக்கு நாட்டின் அவல விலையை உணர்த்துகிறது :((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாதம் மும்மாரி பொழிந்தால் நாடு செழிக்கும்... மாதம் மும்முறை வன்புணர்வு செய்திகள் வந்தால் நாடு அழியும்... வெளிவந்தவை இவைகள்... வராதவை எத்தனையோ....

      நீக்கு
  4. பதில்கள்
    1. வெறும் தண்டைனகளால் மட்டும் பெரிய மாற்றங்கள் வருமென்று தோன்றவில்லை... டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தவனுக்கும் தண்டனைகள் வழங்கப்பட்டது, ஆனல் அதன் பின் அக்குற்றம் ஒன்றும் குறைந்ததாக தெரியவில்லையே... அதே டெல்லியிலேயே அது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதானே இருக்கின்றன... தண்டனைகளைத் தாண்டிய சீரிய கல்வி முறை அல்லது போதித்தல் நம் சமூகத்தின் உடனடி தேவை...

      நீக்கு
  5. வணக்கம் தோழி...

    தண்டனைகள் மிகக் கடுமையானதாக மாற்ற வேண்டும்... பெண்ணை அவள் அனுமதியின்றி பார்ப்பது கூட தவறென்ற சமூகத்தினரும் வாழும் இடத்தில் இப்படிப்பட்ட மனிதர்களும் வாழ்கிறார்கள் என்ற செய்தி மிகுந்த கவலை அளிக்கிறது. போதிய விழிப்புணர்வும், கல்வியறிவும் தேவை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிஜம் தான் விழிப்புணர்வு கட்டாய தேவை இன்றைய சூழலில்....

      நீக்கு
  6. அரசன் எவ்வழியோ குடிகளும் அவ்வழி அது தமிழ் நாட்டில் மட்டும் அல்ல மத்திய அரசிலும் இப்போதைய நிலை ! படித்தவன் முட்டாளாய் இருக்கிறான் பாமரன் அதைவிட கேவலமா இருக்கிறான் ! இந்த பஞ்சாயத்து பெரிசுகளை முதல்ல போட்டுத் தள்ளனும் ! பெண்களை தாயாக பார்க்காத கூட்டமும் இருக்கு ஆண்களை நாயாய் பார்க்கும் கூட்டமும் இருக்கு கடவுள் தான் இனி எல்லோரையும் காப்பாத்தணும் !
    5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாக சொன்னீர்கள் அண்ணா.. இந்த கிராமப்புற காப் பஞ்சாயத்துகளின் ஆட்டம் சொல்லி மாளாது....இவர்களை முதலில் தடை செய்ய வேண்டும்....

      நீக்கு
  7. உங்களது சரியான கருத்துக்கள்.
    டெல்லி பெண் மீதான வல்லுறவு ,காரைகாலில் பெண் மீதான வல்லுறவு,இப்போ மேற்க்கு வங்காள பெண் மீதான வல்லுறவு,கொடுமை. தொடர் காட்டுமிராண்டிதனம். ரொம்ப ரொம்ப அவமானமாயிருக்கு.
    பாரத நாடும் தமிழர்களும் நாகரீகத்தில் உலகத்திற்கே மூத்தோர், வழிகாட்டி பெண்களை எல்லாம் வணங்கி பெண்களுக்கு மதிப்பளிப்பவர்கள் என்ற புருடா கதைகளுக்கு ஒன்றும் குறையில்ல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாகரீகத்தில் உயர்ந்த இந்தியர்களின்(வெளியில் சொல்லப்பட்ட) உண்மை குணம் வெட்டவெளிச்சமாகியுள்ளது... நாங்கள் இன்னும் காட்டுமிராண்டிகள் தானென்று மீண்டும் மீண்டும் உணர்த்துகின்றனர்....

      நீக்கு
  8. இதைப்போன்ற ஒவ்வொரு செய்தியைப் படிக்கும் போதும் என் மனதில் இத்தகைய குமுறல்கள் எழுவதுண்டு ப்ரியா. அதை வார்த்தைகளால் இங்கு காண்கையில் சற்று ஆறுதல். தங்கை ராஜி சொன்னதைப் போன்ற கடும் தண்டனையை & விசாரணை எதுவுமின்றி & இத்தகைய மிருகங்களுக்கு வழங்குவதுதான் மற்றவர்களுக்குப் பாடமாக அமையும் என்று கருதுகிறேன். அல்லது தலைவர்களுக்கு நடுத்தெருவில் சிலை வைப்பது போல... இதுங்களை கம்பத்தில் நடுத்தெருவில் கட்டிப்போட்டு சோறு தண்ணியில்லாம சாகும்வரை விட்ரணும். ஹும்...! என் கைல அதிகாரம் இருந்தா உடனே நிறைவேத்திட முடியும். இப்போ நாம எல்லாரும் இப்படி கொந்தளிச்சு ஆறுதல் தேடிக்கத்தான் முடியும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் அண்ணா...ஆனால் தண்டனைகளைத் தாண்டிய சில புரிதல்களை அனைவரின் மனதிலும் அளிக்க வேண்டியதும் தற்காலத்தின் மிக முக்கிய தேவை... அதை அனைவரும் அவரவர் குடும்பத்தில் உள்ள வளரும் தலைமுறையின் மனதில் விதைக்க வேண்டும்....

      நீக்கு
  9. கண்ணியதோடு வாழ்வது எப்படி என்று மறந்துக் கொண்டிருக்கிறார்கள்.....

    பதிலளிநீக்கு