பக்கங்கள்

நூல் விமர்சனம் - ஆவிப்பா மற்றும் மொட்டைத்தலையும் முழங்காலும்

புத்தகங்களுக்கான அறிமுகத்தில் இம்முறை இரண்டு புத்தகங்கள். ஒன்று கவிதை புத்தகம் மற்றொன்று நகைச்சுவை சிறுகதைகளின் தொகுப்பு. இரண்டு புத்தகங்களுக்கும் உள்ள மிகப் பெரிய ஒற்றுமை இரண்டுமே நம் பதிவர்கள் எழுதி வெளியிட்ட புத்தகங்கள்.

ஒன்று "கோவை ஆவிஅவர்களின் "ஆவிப்பா" கவிதை தொகுப்பு, மற்றொன்று சேட்டைக்காரன் அவர்களின் மொட்டைத்தலையும் முழங்காலும் என்ற சிறுகதைகளின் தொகுப்பு.


ஆவிப்பா குட்டிக் குட்டி கவிதைகள் கொண்டு தொடுக்கப்பட்ட மலர்ச் சரம். மொத்தமாய் படித்து முடிக்கையில் மனதில் தோன்றியதை அப்படியே இங்கே சமர்ப்பிக்கிறேன். மொத்த புத்தகத்திலும் பல சினிமா பாடல்களின் தாக்கமும், சமூக வலைத்தளங்களில் கொட்டிக் கிடக்கும் பதிவுகளின்(?) தாக்கமும் மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது. சில கவிதைகளைப் படிக்கும் பொழுது அப்பட்டமாய் அவை சம்பந்தப்பட்ட சினிமா பாடல்கள் அப்படியே மனதினுள் வந்து போகின்றன, தங்க மீன்கள், நீ வருவாய் என என்று ஆரம்பித்து. இவ்வகையான போக்கு சமூக வலைத்தளங்களில் எழுதும் போது வேண்டுமானால் அப்போதைக்கு பகடி செய்யவும் கருத்துக்களை வளர்க்கவும் உதவலாம், ஆனால் கவிதைப் புத்தகத்தில் வருகையில் படிப்பவர்க்கு ஒரு சலிப்பையும், கவிதைகளிலிருந்து விலகி செல்வதற்க்கான ஒரு உணர்வையும் தந்து விடுகிறது. 


நல்ல கவி மனம் அமைந்து அதற்க்கு ஏற்றார்போல் வார்த்தை கோர்வைகளும் அமைவது மிகவும் கடினம். அது இரண்டுமே இவரிடம் இருக்கிறது, இருப்பினும் ஏனோ அதை அவர் சரியாக பயன்படுத்தாமல் வெறும் பகடிக்கு கவிதை எழுதும் ஒரு சாமனியரைப் போல் பல கவிதைகள் எழுதியிருப்பது வருத்தத்தை அளிக்கிறது. இவரிடம் கவிதைக்கான குணங்கள் கொட்டிக் கிடப்பதற்க்கும் இவருடைய ஆவிப்பா புத்த்கத்திலேயே பல சான்றுகள் உள்ளன. சில கவிதைகள் படித்ததுமே அட! போட வைக்கின்றன. 
உதாரணம்,

"மழைக் கவிதை 
வேண்டுமென்றாய்
இதோ உனக்காக 
மழையே கவிதையாய்..! "

இது போன்ற பல கவிதைகள் இவரிடமிருந்து வருவதற்க்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.. ஏனோ சரியான தேடலின்மையால் அது தொலைந்ததாக தனிப்பட்ட முறையில் நான் உணர்கிறேன். திருத்திக் கொண்டால் இவரது அடுத்த புத்தகம் நிச்சயமாய் ஒரு முழுமையான கவிதைப் புத்தகமாய் மிளிர வாய்ப்புகள் அதிகம்.

கடைசியாய் புத்தகத்தின் வடிவமைப்பு குறித்து இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். புத்தகம் முழுவதும் நஸ்ரியா விதவிதமாய் அழகழகாய். இதற்கும் கூட ஒரு தனிப்பட்ட தைரியம் வேண்டும்.புத்தகக்  கடைகளில் காதலர்கள் பரிசளிப்பதற்க்கான புத்தகங்கள் என்றே தனியாய் இருக்கும், இலக்கணம் இலக்கியம் இவற்றிர்கெல்லாம் அப்பாற்பட்டு காதல் மட்டுமே குறிக்கோளாய்.அது போன்ற பரிசளிப்பிற்கு உகந்த புத்தகம் இது. 

நம்பிக்கையுடன் அவருக்கு நம்முடைய வாழ்த்துகளைப் பகிர்வோம்.
வாழ்த்துக்கள் ஆவி சார், உங்களுடைய அடுத்த புத்தகத்தை எதிர்பார்த்து.....


                                                           ----XXXX----


அடுத்தாக சேட்டைகாரன் அவர்களின் "மொட்டைத்தலையும் முழங்காலும்", ஒரு முழு நீள நகைச்சுவைப் புத்தகம். எழுத்துக்களிலேயே மிகவும் கடினம் நகைச்சுவையாக எழுதுவதுதான். பிறரை சிரிக்க வைப்பதென்பது அத்தனை சுலபம் இல்லை என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. அந்த வகையில் நகைச்சுவை எழுத்தாளர்கள் தனித்தவர்களே. 

மொட்டைத்தலையும் முழங்காலும் புத்தகத்தைப் பொருத்த வரையில்,ஆரம்பத்தில் இருக்கும் சில கதைகளைப் படித்த பொழுது அதீத நடிப்பினை வெளிப்படுத்தும் நடிகனின் படத்தினைப் பார்ப்பது போல் ஒரு அயற்ச்சி  உண்டாயிற்று, ஆனால் பின்னால் செல்லச் செல்ல உண்மையிலேயே நல்ல நகைச்சுவை உணர்வு மிக்க இயல்பான பல கதைகள் தொடர்ந்து வந்து என் எண்ணத்தை மாற்றியது.இயல்பான வாழ்க்கைக்கு சற்றேனும் பொருத்தமில்லதா திணிக்கப்பட(எனக்கு அப்படித் தோன்றிய) சில கதைகளின் அணிவகுப்பே அந்த அயற்ச்சிக்கு காரணம். அது என்ன எந்த நகைச்சுவை எழுத்தாளரின் வீட்டிலும் அவர்களுடைய மனைவிகள் சமையலில் மிகப் பெரிய சொதப்பவாதிகளாகவே இருக்கின்றனர், நகைச்சுவைக்கு வாழ்க்கையில் எத்தனையோ சம்பவங்கள் இருக்க அனைவரும் இதையே கையால்வது ஏனோ?. சில கதைகளில் பெண்கள் என்றாலே சொதப்புபவர்கள், அறிவீலித்தனமாய் யோசிப்பவர்கள் என்பதை முன் வைத்து நகர்த்திச் சென்றிருப்பது மிகப் பெரிய வருத்தத்தைத் தருகிறது. 

ஆனால், இந்த குறைகளையெல்லாம் எழுத்தாளர் அவரது அடுத்த புத்தகத்தில் சரி செய்து கொள்ளட்டும் என்று சொல்வதற்க்கு வாய்ப்பே அளிக்காமல் இதே புத்தகத்திலேயே இவரது அடுத்த அடுத்த கதைகள் வாழ்க்கையின் இயல்பான ஓட்டத்தில் பயணித்து, அதிலிருந்தே நகைச்சுவைகளை எடுத்து கோர்த்திருக்கிறது. அவைகள் அனைத்தும் உண்மையிலேயே இரசித்து சிரிக்கும் படி அமைந்த்திருக்கிறது. குறிப்பாக "தலைக்கு வந்தது" "கல்யாணம் அட்டெண்ட் பண்ணிப் பார்" "ஆயிரம் எலி பிடித்த அபூர்வ ராஜாமணி" "மிஷ்டிதோயும் ரசகுல்லாவும்" இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். அத்தனையும் அவ்வளவு அற்ப்புதம். புத்தகத்தின் ஆரம்பத்தில் சில கதைகளை விடுத்தால் குறை என்று சொல்வதற்க்கு எதுவுமே இல்லை என்றாகியிருக்கும். வாழ்த்துக்கள் சேட்டை சார்...

அப்படியே இரண்டு புத்தகங்களையும் எனக்கு அறிமுகப்படுத்தி அளித்த "மின்னல் வரிகள்" பால கணேஷ் அண்ணா அவர்களுக்கும் என் நன்றிகள்.


குறிப்பு : இது முழுக்க முழுக்க புத்தகத்தைப் படிக்கும் பொழுது
எனக்குத் தோன்றிய எண்ணம் மட்டுமே.. பொதுவான கருத்து அல்ல.


--பிரியா


16 கருத்துகள்:

 1. ஆவிப்பா புத்தகம் நான் இன்னும் படிக்கலை. இருந்தாலும் தம்பிக்காக சில சிரமங்களைத் தாங்கித்தான் ஆகனும்!:-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா அதுதானே... இந்த புத்தகத்தில் தாங்கிக்கலாம் அக்கா.. அடுத்த புத்த்கத்தின் மீதான நம்பிக்கையுடன்... :)

   நீக்கு
  2. யக்கா.. ராஜியக்கா.. பாசமலர் கணக்கா கண்கலங்க வச்சுட்டியே அக்கா..!! :)

   நீக்கு
 2. * ‘ஆவிப்பா’ புத்தகம் கோவை ஆவியின் முழுத்திறமையையும் வெளிப்படுத்துவதாகக் கொள்ள முடியாது ப்ரியா. அவனுக்கு ஒரு விசிட்டிங் கார்டாக இந்தப் புத்தகம் அமைந்துள்ளதாக என் கருத்து. இன்னும் பல வீரியமிகு கவிதை மற்றும் கதை, கட்டுரை நூல்கள் கோவை ஆவியிடமிருந்து நிச்சயம் வெளிவரும்.
  * நடைமுறை வாழ்க்கையில் செய்ய முடியாததை கதையின் ஹீரோ செய்வதை மக்கள் ரசிப்பது வழக்கம். அடிதடி சண்டைப் படங்கள் வெற்றிபெற வேறென்ன காரணம்? அதுபோல நிஜ வாழ்வில் கலாய்க்க முடியாத மனைவிகளை நகைச்சுவைக் கதைகளில் கலாய்ப்பது எழுத்தாளர்களின் வழக்கம்/அடிப்படை உரிமை. நகைச்சுவைன்னு சொன்னா படிச்சு சிரிக்கணும்... ஆராயக் கூடாதும்மா! அங்கயாவது நாங்க கலாய்ச்சுட்டுப் போறமே... ஹி... ஹி...! உன்னுடைய விமர்சனத்தை சம்பந்தப்பட்ட இருவருக்கும் கடத்துகிறேன். அவர்களின் பதிலையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் உன் அன்பு அண்ணன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரிதான் அண்ணா.. அதனால்தான் நானும் கூறினேன் அவருக்குள் திறமை உண்டு ஆனால் இந்த புத்தகத்தில் அது சரியாய் வெளிப்படவில்லை என்று... பல நேரங்களில் விசிடிங்க் கார்டுகளே தீர்மானிக்கும் சக்தியாயும் மாறி விடுவதுண்டே... தம்பியை விட்டுக் கொடுக்காத அண்ணன்... :P

   அண்ணா அடிதடி சண்டைப் படங்கள் அந்த நேரம் வெற்றி பெறலாம் ஆனால் மக்கள் மனதில் நிலைத்து இருப்பதில்லையே? படைப்புகள் நிலைத்து இருப்பதில்தான் படைப்பாளியின் வெற்றியே.

   // நிஜ வாழ்வில் கலாய்க்க முடியாத மனைவிகளை நகைச்சுவைக் கதைகளில் கலாய்ப்பது எழுத்தாளர்களின் வழக்கம்/அடிப்படை உரிமை. // ஹாஹா இது என்ன என் தங்கம் என் உரிமை போலவா? ஒருவரே போதும் அண்ணா நீங்களும் எதற்க்கு? ...காலாய்த்தல் இருக்கலாம் ஆனால் ஒரே விதமான காலய்த்தலை தொடர்ந்து பார்க்கையில் ஒரு வித சலிப்பு தட்டி விடுகிறது... அடுத்த அடுத்த கதைகளில் குடும்பம் மனைவி என்று வருகையில் இங்கும் அதேதான் இருக்கும் என்ற என்ணம் தோன்றி அக்கதையை வாசிக்காமலே தாண்டி போகவும் சொல்கிறது மனம் அதற்க்காகவே அந்த விமர்சனத்தை முன் வைத்தது....

   நன்றி அண்ணா... நானும் அவர்களின் எதிர் வினையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.... :)

   நீக்கு
 3. ஆவிப்பாக்களை முகநூலில் படித்துள்ளேன்! புத்தகம் இன்னும் வாங்கவில்லை! சேட்டைக்காரனின் நூல் வாங்கி படித்து ரசித்து சிரித்து மகிழ்ந்தாயிற்று. நல்ல நகைச்சுவை விருந்து! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியா... முகநூல் பதிவுகளைத்தான் புத்த்கமாக்கியுல்ளார் என்று நினைக்கிறேன்.... நன்றி சகோ...

   நீக்கு
 4. சேட்டையை ரசித்து விட்டேன்... ஆவியையும்...

  'ஆவிப்பா'வை இனிமேல் தான்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா... விரைவில் ஆவிப்பாவையும் இரசித்து விடுங்கள் தனபாலன் சார்... :)

   நீக்கு
  2. ஆவிப்பா உங்களை தேடி வந்துகிட்டே இருக்கு DD.. :)

   நீக்கு
 5. நடுநிலையான விமர்சனம்... இரண்டு புத்தகங்களுமே படித்தாயிற்று....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. "பிரிய" சகோதரிக்கு,

   முதலில் என் புத்தகத்தை முழுவதும் படித்து, சில இடங்களில் ரசித்து, சில இடங்களில் சலித்து, உணர்ந்தவைகளை அப்படியே வார்த்தைகளில் வார்த்தெடுத்து வாழ்த்தியமைக்கு நன்றிகள்..

   "ஆவிப்பா" வெளியீட்டு விழாவில் கூறியதுபோல் என் பதின்வயதில், எழுத்துப் பழகிய நாட்களில் காதலாளின் புன்முறுவலுக்காய் காதலும், நேசமும் குழைத்து தமிழ்ப்பாலும் கொஞ்சம் ஆங்கிலப் பாலும் சேர்த்து படைத்திட்ட "பா" அது.

   ஏட்டில் ஏறிய சுரைக்காய், இதில் சில கறிக்கு உதவாது என்பதை பொட்டில் அறைந்தாற்போல் கூறிய அழகு பிடித்திருந்தது. சுற்றிலும் நண்பர்கள் சூழ "இது ஆஹா", "அது ஓஹோ" என்று ஆனந்த புரத்தின் ராஜாவாய் சுற்றித் திரிந்தவனை "இவன் உயரம் இது அல்ல, இன்னும் கொஞ்சம் எம்பிக் குதித்தால் இமயம் தொடலாம்" என்று விளங்க வைத்தமைக்கு நன்றிகள் பல.

   எல்லாம் ஏற்றுக் கொள்ளப்பட்டது, திருத்திக் கொள்ளலாம் அடுத்த படைப்பில்- நிச்சயம் ஒன்றைத் தவிர.. திரைப்படங்களின் தாக்கங்கள் மிகுதியாய் உள்ளதென்ற அந்த ஒன்றைத் தவிர. ஓடுகின்ற குருதியிலே ஒன்றெனக் கலந்துவிட்ட ஒன்றல்லவா அது.. அதை தவிர்த்து சிந்திப்பதற்கு இன்னும் பக்குவப்பட வேண்டுமம்மா.. அதுவரையில் கொஞ்சம் பொறுத்தருள்க..! :) :) :)

   நீக்கு
  2. வணக்கம் சகோ... என் பதிவிர்க்கு கருத்திட்டமைக்கு நன்றிகள்... என் கருத்தினை ஏற்றுக் கொண்டமைக்கும்... நான் முன்னமே கூறியது போல, உங்கள் புத்தகத்தினைப் படித்த பொழுது எனக்கு என்ன தோன்றியதோ அந்த எண்ணங்களின் தொகுப்பே இது...

   திரைப்படப் பாடல்களின் தாக்கம் நிச்சயம் எல்லோரிடத்திலுமே இருக்கும் அதை மறுக்க இயலாது, என் எண்ணம் என்னவெனில் அவற்றை இத்தனை அப்பட்டமாக வெளிக்காட்டி இருக்க வேண்டாம் என்பதுதான் ... மற்றையபடி உங்கள் படைப்புகள் எப்படி இருக்க வேண்டும் என்பது உங்கள் மனதினைப் பொறுத்த விடையம் மட்டுமே... :)

   நீக்கு
 6. பொதுவாக, விமர்சனங்கள் என்னை மிகவும் பாதிக்கும். ஆனால், எனது புத்தகம் வெளியானபிறகு, அந்த மனநிலை மாறியது.
  நகைச்சுவை என்பதற்கு எவ்விதமான அடிப்படை விதிகளும் இல்லை. ஒருவர் வாழைப்பழத்தோலில் வழுக்கி விழுந்தால், அது அவருக்கு வேதனை; பார்ப்பவர்களுக்குச் சிரிப்பு. இப்படி ஒவ்வொரு நிகழ்விலும் இருக்கிற சுயமுரண்பாடுகளைக் கவனித்தால், நகைச்சுவை என்பதில் இருக்கிற எளிமை புரியும். இந்த எளிமையைக் கூர்ந்து கவனிக்கிறவர்களுக்கு நகைச்சுவையாக எழுதுவது ஒருபோதும் கடினமாக இராது. ஆகவே, இருப்பதிலேயே நகைச்சுவையாக எழுதுவதுதான் கடினம் என்று திரும்பத் திரும்பப் பலர் எழுதுவதும் பேசுவதும் ‘அயற்சி’யாக இருக்கிறது. It is a myth.
  மற்றபடி, எனது புத்தகம் குறித்த உங்கள் விமர்சனம் பற்றி பதிலுரை அளிக்க விரும்பவில்லை. அது உங்கள் உரிமை. ஆனால், வாசித்து அதைப் பகிர்ந்து கொண்டிருக்கிற உங்களது முனைப்புக்கு நன்றியும் பாராட்டுக்களும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சேட்டைக்காரன் சார்... உங்களது பதிலிலேயே நகைச்சுவைக் கடினம் என்று நான் சொன்னதர்குரிய காரணமும் அடங்கி இருக்கிறது... நீங்கல் சொல்வது போல் வாழ்க்கையின் அனைத்து நொடிகளிலும் ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு நிகழ்வில் நிச்சயம் நகைச்சுவை உண்டுதான்... அதை மறுக்க இயலாது... ஆனால் பெரும்பாலானோர் அதை அந்த நிமிடமோ நொடியொ கடந்து வந்து விடுகின்றனர் அது குறித்து மேண்டும் சிந்த்திப்பது கூட கிடையாது.. அப்படியே சிந்திதாலும் அதை எழுத்தாக்குவது இல்லை. எல்லோராலும் அனைத்தையும் எழுத்தில் வடித்து விடுவதென்பதும் இயலாத காரியமே. ஒரு நிகழ்ச்சியைக் குரித்து நினைவலைகளை பகிர்வது சுலபம்... ஆனால் அங்கே நடந்த நகைச்சுவை அதன் சுவை குறையாமல் எழுத்தில் வடிப்பது அத்தனை சுலபமாய் இருப்பதில்லை (என் வரையில்).. அதனால் தான் அப்படிக் குறிப்பிட்டேன்..அத்துடன் இந்த புத்தகத்தை குறித்து நான் என் உணர்வுகளை எழுதும் முன்போ அல்லது அதன் பின்போ குறிப்பிட்ட புத்தகத்தையோ அல்லது வேறு எந்த நகைச்சுவைப் புத்த்கத்தின் விமர்சனத்தையோ நான் படித்ததும் இல்லை... அதனால் the so calles myth குறித்து நான் எதுவும் அறியேன்.. அதனால் என் விமர்சனம் உங்களுக்கு அயர்ச்சியை ஏற்ப்படுத்தி இருப்பது குறித்து என்னிடம் எந்த பதிலும் இல்லை(இதைத் தவிர)


   நிச்சயமாய் என் விமர்சனம் குறித்த உங்கள் பதிலுரையை எதிர் நோக்கி நான் இந்த பதிவினை எழுதவில்லை... மீண்டும் மீண்டும் சொல்கிறேன்இது என் என்ணங்களின் வெளிப்பாடு அவ்வளவே, எதையும் எதிர் நோக்கிய பதிவல்ல... இருப்பினும் என் பதிவிர்க்கு கருத்திட்டமைக்கு நன்றிகள்...

   நீக்கு