பக்கங்கள்

எண்ணங்கள்


சாலைகளில்
என் பயணங்களில்
ஒரு கணம்
என்னை நிலைநிறுத்தி
செயலறுக்கச்  செய்கின்றன
சில எண்ணங்கள்


அவை எதுவாகவும்
இருக்கக் கூடும்
சில பொழுதுகளில்
முடிந்துவிட்ட என்
பொழுதுகளின்
முடியாத நீட்சிகளாயும்சில சமயங்களில்
இன்னும் பிறந்திராத
பச்சைப் பொழுதின்
அறுதியிடா
எதிர்கால கனவுகளால்
பூத்தவையாயும்

எது எப்படியோ
இந்த எண்ணங்கள்
"என்னைக்
கட்டியிருத்துகின்றன
என் பொழுதுகளைக்
களவாடிச்  செல்கின்றன"

இருப்பினும்
என்னால் விடைபெற முடியா
விடைபெற்றுச் செல்லா  - உறவுகளாய்
என்னுடனே
என் எண்ணங்கள்
--பிரியா

12 கருத்துகள்:

 1. முடிந்து விட்ட பொழுதுகளாகவும் பு(எ)திர்காலத்தைக் கண்ணுறும் நீட்சிகளாகவும்... அப்பப்பா... எண்ணங்கள் படுத்தும் பாடு கொஞ்சமா என்ன..? ரசனையான கவிதை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் அண்ணா... எண்ணங்கள் படுத்தும் பாடே பாடு

   நீக்கு
 2. எண்ணங்கள் வாழ்வில்
  எழிலாடும் நேரங்கள்
  எல்லோர்க்கும் இனிமை
  என்றென்றும் புதுமை..!

  அருமை ப்ரியா வாழ்த்துக்கள்
  வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 3. எண்ணங்கள் இல்லா வாழ்க்கை வண்ணங்கள் இல்லா வாழ்க்கை போல! எண்ணங்கள்தாம் நம்மை உயர்த்தவும் தாழ்த்தவும் செய்கிறது! அருமையான கவிதை! நன்றி!

  பதிலளிநீக்கு
 4. நம்மை விட்டு என்றுமே பிரியாத உறவுகள் நம் எண்னங்கள் மட்டுமே! கவிதையும் கருத்தும் அழகு!!

  பதிலளிநீக்கு