பக்கங்கள்

சிதறல் - 9

அச்சாரம்
------------
                 
என் அத்தனை
நகர்வுகளிலும் என்னுடன்
சுற்றி சுழல்கிறது - உன்
அன்பெனும் அச்சாரம்

                                     -----X-----


புன்னகை
-------------

ஒரு
மந்திரக் கோலாய்
எப்பொழுதும்
எனக்கான புன்னகையை
தாங்கி வருகிறது
நீ அனுப்பும்
குறுஞ்செய்தி

                                     -----X-----
தூறலிலும் ....
--------------

எனக்கான
அத்தனை தூறல்களிலும்
ஒளிந்திருக்கிறது
உனக்கான எதிர்பார்ப்பு...

     
                                     -----X-----
 


தெரியுமா?
--------------

இறுதியாக கேட்க்கிறேன்..
எனக்கு
காதல் கவிதைகள்
எழுத வருவதில்லை
என்ற இரகசியம்
உனக்கு தெரியுமா?


--பிரியா 

7 கருத்துகள்:

 1. அன்பெனும் அச்சாரம், மந்திரக்கோல் புன்னகை, எதிர்பார்ப்புத் தூறல், தன்னையறியாத கவிதை என்று எல்லாச் சிதறல்களும் மனதிற்குள் மழை பொழியச் செய்ததம்மா ப்ரியா! தொடருங்கள்...! (தூறலிலும் கவிதையில் ஒழிந்திருக்கிறது & ஒளிந்திருக்கிறது என்று மாற்றினால நலம்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி அண்ணா... குறையை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி சரி செய்து விட்டேன்... :)

   நீக்கு
 2. குறுஞ்செய்தி - இரகசியமும் பிடித்தது...

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 3. மந்திரக்கோலும், அச்சாரமும் என்னை கவர்ந்தது பிரியா!

  பதிலளிநீக்கு
 4. சின்னச் சின்ன சிதறல்களில்
  சிரிக்கும் உந்தன் உணர்வுகளின்
  கன்னல் சுவைகள் காண்கின்றேன்
  கனிவாய் வாழ்த்திச் செல்கின்றேன்
  இன்னும் கவிகள் எழுதிடுவாய்
  இகத்தின் முகமாய் மலர்ந்திடுவாய்
  என்றும் உன்னை நெஞ்சினிலே
  ஏற்றி நிற்பேன் சகோதரியே !

  அருமை பிரியா
  இனிய வாழ்த்து
  வாழ்க வளமுடன் 5

  பதிலளிநீக்கு