பக்கங்கள்

எங்களையும் கொஞ்சம்...
ஓ வண்ணத்துப்பூச்சியே!

சிறகடிக்கும் நீ
சிறகின் வர்ணங்களோடு
எங்கள் சோகங்களையும்
எங்காவது கொண்டு செல்!

ஓ வான்மேகமே!

சுமந்து வந்த தூறலோடு
எங்களுக்காய் கொஞ்சம்
இன்பங்களையும் சேர்த்து
தூவிவிட்டு போ!

ஓ சூரியனே !

ஒளிவீசும் கதிர்களால்
எங்கள மனங்களையும்
நனைத்து கொஞ்சம்
ஒளிரச் செய்!

ஓ தென்றலே!

பூவினை தீண்டியதுபோல்
எங்களையும் கொஞ்சம்
செல்லமாய் தீண்டி
சோகங்களை தீர்த்து செல்!

ஓ இயற்கையே!

உன் கொடைகளை
எங்களுக்கு அளித்து
உன்னைப்போல் எங்களையும்
மிளிரச் செய்!


--பிரியா


4 கருத்துகள்: