பக்கங்கள்

வேண்டும்...
புத்தம் புதியதாய்
உலகொன்று வேண்டும் - சுதந்திர
உலகொன்று வேண்டும்

சுற்றித் திரியவும்
எட்டி நடக்கவும் - அகண்ட
வீதிகளங்கே வேண்டும்

வீதிகளைச் சேர்த்தினைக்கும்
பெரியதொரு வீடும் - அதில்
நிலாமுற்றமும் வேண்டும்

தோழிகளுடன் சேர்ந்தாட
பெரியதொரு புளியந்தோப்பும் - உடன்
குளக்கரையும் வேண்டும்

அன்பான ஆசானுடன்
ஆயகலைகள் கற்றிட - பெரியதொரு
கல்விச்சாலையும் வேண்டும்

சமூக மாற்றங்களும்
அறிவியல் வளர்சிகளும் - உடன்
பெண்விடுதலையும் வேண்டும்

பெண்ணென்ற காரணத்தால்
கண்டிட்ட தடைகளெல்லாம் - அங்கே
நொருங்கிசிதறிட வேண்டும்

ஆணும் பெண்ணும்
சமமென நடத்தும் - உயர்வான
நெஞ்சங்களும் வேண்டும்

வெளியெங்கும் சென்றிட
பயமின்றி நடந்திட - துணையாய்
சமூகமும் வேண்டும்

புத்தம் புதியதாய்
உலகொன்று வேண்டும் - சுதந்திர
உலகொன்று வேண்டும்

தடைகள் இன்றி
நிறைவேறிட வேண்டும் - இயல்பாய்
தோன்றிடும் ஆசைகளெல்லாம்


--பிரியா


2 கருத்துகள்:

  1. காணி நிலத்தி்ல தொடங்கி, தூணில் அழகிய வீடும், தென்னை மரங்களும், நல்ல காற்றும், பத்தினிப் பெண்ணையும் பராசக்தியிடம் கேட்டவர் மனதில் வந்து போனார். நீங்கள் விரும்பிய விஷயங்களில் ஆணும் பெண்ணும் சமமென நடத்தும் உயர்வான நெஞ்சள் கேட்டிருப்பது எனக்கு மிகப் பிடித்தது. இயல்பாய்த் தோன்றிடும் ஆசைகளை நிறைவேற்றி மகிழ புத்தம் புதிய உலகொன்று நமக்கு அவசியம் கிடைத்திடத்தான் வேண்டும்!

    பதிலளிநீக்கு
  2. மீசை கவிஞனின் காணி நிலத்தின் பாதிப்பில் எழுதியதுதான் இந்த வரிகளும்... இதில் நான் ஆண் பெண் சமத்துவமும் இன்ன பிறவும் அவர் சொல்லி கொடுத்தவைதானே... அவர் கண்ட கனவுகள் இவை.. நனவாகும் நாள் நிச்சயம் தூரத்தில் இல்லை...

    பதிலளிநீக்கு