பக்கங்கள்

பெண்மையின் ஜனனம்...கணங்கள் மாறி
யுகங்கள் தோன்ற
வரங்கள் வேண்டிய
தவங்கள் எல்லாம்
வெள்ளம் வற்றிய
காடாய் மாற

காலம் மாறிட
காற்றும் மாறிட
உற்றம் சுற்றம்
எல்லாம் மாறிட

பெண்மையை போற்றுதும்
போற்றும் பாரதிகள்
ஒன்றாய் பலவாய்
ஜனனம் எடுத்திட

அன்று பிறக்கட்டும்
பெண்மையின் ஜனனம்
உணமையாய் உயர்வாய்
இத்திருநாட்டில் - அவ்வரை
வள்ளுவன் வாக்காய்
தோன்றலின் தோன்றாமை
நன்றாம் இங்கே


--பிரியா 

4 கருத்துகள்: