பக்கங்கள்

ஒரு பயணத்தில்....சொல்லவேண்டிய காதல்
சொல்லப்பட்ட காதல்


மறந்துபோன தேநீர்
மறுக்கப்பட்ட வார்த்தைகள்

பிரிந்துபோன உறவுகள்
பிரியமான நட்பு

நேற்றைய மழை
முந்தைய இரவு

பூக்காத ரோஜா
புரியாத பாடம்

படிக்காத புத்தகம்
பார்த்த திரைப்படம்

அம்மாவின் ஸ்பரிசம்
அப்பாவின் கோபம்

கொஞ்சம் சந்தோசம்
கொஞ்சம் துக்கம்

நினைவுச் சாரலில்
எல்லாமும் வருகின்றன

தனிமையை துணையாக்கி
அனைவரும் செல்லும்

ஒருமணி நேரப்
பேருந்து பயணத்தில்


-- பிரியா


5 கருத்துகள்:

 1. மிக மிக அருமை
  பயணத்துணையாக பல சமயங்களில்
  இந்த நினவுகள்தான் கூட வருகின்றன
  மனம் கவர்ந்த கவிதை
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. நினைவுச் சாரல்! மிகச் சரி... பெரும்பாலான பேருந்துப் பயணங்களில் என் நினைவுகள் பின்னோக்கிச் சென்று எங்கெங்கோ நீந்த ஆரம்பித்து விடும்! வெகு பேஷான கவிதைம்மா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த வரிகள் கூட என் பேருந்து பயணத்தின் போது தோன்றியவைதான்... :)

   நீக்கு
 3. அட ஆமால்ல ...! தனிமைப் பயணங்கள் நம்மை நாமே ரீவைண்ட் பண்ணிப் பார்க்கும் ஓர் அழகான ஆட்டோகிராப் போலத்தான் ...!

  கவித நல்லாருக்குங்க ..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ! நிச்சயமாய் அழகான ஆட்டோகிராப்... மிக்க நன்றி... :)

   நீக்கு