பக்கங்கள்

இரவுடன் நான்...


ஓர் இரவு
ஒற்றைக் கூரை
நிலவும் வேண்டாம்
விண்மீனும் வேண்டாம்

தொட்டு வைத்த
புள்ளி போல
பொட்டு வெளிச்சமும்
வேண்டவே வேண்டாம்

விட்டு விடுங்கள்
இப்படியே விடுவித்து
நானும் இரவுமாய்
பேசிக்கொண்டே இருக்கிறோம்!

சொல்லொனா துயரங்கள்
விடைபெறா வேதனைகள்
மௌனத்தின் பாசையில்
இடைவிட பரிமாற்றங்கள்

கதைக்கத்தான் எத்தனையோ
முடிக்கத்தான் பார்க்கிறோம்
கொஞ்சமேனும் நீளட்டும்
இவ்வினிய இரவு

விட்டு விடுங்கள்
இப்படியே விடுவித்து
நானும் இரவுமாய்
பேசிக்கொண்டே இருக்கிறோம்!







--பிரியா



7 கருத்துகள்:

  1. நெஞ்சை வருடும் வரிகள் இரவுடன் கூடிய ஏகாந்த நிலையை உணர்வுகள் ஆக்குகின்றன. அருமை
    நன்றி
    சிரித்திரன்

    பதிலளிநீக்கு
  2. அழகான கவிதை...சல சலத்தோடி-சங்க நாதம் எழுப்பும் சொர்க்கத்து நதி போலப் பாய்கிறது கவிதை. அதிகாலை நேரம்-அமைதியாய் இரசித்தேன்!

    எனக்கொரு உதவி வேண்டும்..

    தமிழ் மணம் பட்டையை எப்படி என் பதிவில் இணைப்பது? இபோது template இல் பழைய முறை இல்லை. பலமுறை முயன்றும் முடியவில்லை..யாராவது உதவுவீர்களா..?

    e.mail: hameeths16@gmail.com
    Blog: www.ithayaththinoli.co.uk

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாய் உங்களுக்கு உதவி செய்கிறேன். தமிழ்மணம் இணையத்திலேயே இருக்கும் இந்த லிங்கில் சென்று பாருங்கள் உங்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும்

      http://www.tamilmanam.net/tamilmanam/toolbar/blogger.html

      நீக்கு
  3. இரவுடன் பேசுதல்! இனிமையா இருக்கு உங்க கற்பனை...! அப்படியொரு ஏகாந்த இரவிற்கான ஏக்கமும், முன் எப்போதோ கழித்த ஓர் இரவில் நான் மகிழ்ந்ததும் நினைவில் நிழலாடுகிறது! சூப்பர் ப்ரியா! உங்களுக்கும் .உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி.. இரவின் ஏகாந்தம் மனது அனுபவித்து மகிழும் விடயங்களில் ஒன்று.. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... :)

      நீக்கு