பக்கங்கள்

நினைவுகள்...நேசிப்பின் நாட்கள்
உணராமல் உணர்த்தும்
தொலைந்த இதயத்தின்
இதமான வலியை

பாதத்தின் சுவடுகளில்
சிதையுண்ட மணல்துகள்கள்
சொல்லியே செல்லும்
நடைபயின்ற நினைவுகளை

காத்திருப்பின் காலங்கள்
கற்றுத்தந்த பொறுமை
நேசத்தை உணர்த்தும்
மழலையின் சிரிப்பாய்

தெளிவில்லாத தேடலில்
தொடரும் பயணங்கள்
முடிவில்லாத பாதையாய்
நடைபோடும் நிமிடங்கள்

தேடலில் தொலைவதும்
தொலைவதின் தேடலும்
கற்றுக் கொடுக்கும்
மௌனத்தின் பாடங்கள்--பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக