பக்கங்கள்

பிரிவின் எச்சம்...


எனக்காயும் உனக்காயும்
காத்திருந்த நாட்கள்
பனிநிறைந்த காட்டில்
சாம்பலாய் மாறிட

சருகுகளால் நிறைந்திருக்கும்
நந்தவனத் தோட்டத்தில்
எப்படித்தான் தேடிட
நமக்கான பூக்களை

கொட்டுகின்ற மழையிலும்
பற்றியெறியும் தீக்காடாய்
நைந்துபோன இரணங்களால்
எரிகின்ற மனதுடன்

தென்றலாய் நீயும்மாறி
தீண்டும்வழி அறியாமல்
வேதனையில் தீய்ந்து
மாய்கிறேன் நிதம்

எண்ணமெங்கும் வேதனைகள்
எவ்வளவோ கொட்டியிருக்க
வாழ்ந்திடும் முனைப்புடன்
சிரிப்புடன் தொடர்கிறேன்

இறுதியாய் உனக்காக
இன்னுமொரு வார்த்தை
உதிர்த்து செல்கிறேன்
உதிரத்தில் இருந்து

திரும்பாத தடங்களில்
இருவருமே பயணிக்க
தொடராதே என்னை
நினைவினில் கூட...'


--பிரியா

16 கருத்துகள்:

 1. காயப்பட்ட மனது காயப்படுத்த விரும்பாது என்பதை சொல்லும் கவிதைக்கு வாழ்த்துக்கள்.. நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சார்.. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

   நீக்கு
 2. உங்கள் தளம் in என்று முடிவதால் தமிழ்மணத்தில் இணைக்கவோ, ஓட்டுப் போடவோ முடியாது... தொடர்பு கொள்க : dindiguldhanabalan@yahoo.com

  பதிலளிநீக்கு
 3. பிரிவின் வலியை வெளிப்படுத்தும் ஆழமான கவிதை வரிகள் .....

  பதிலளிநீக்கு
 4. பிரிவினைப் பற்றிக் கூறும் அழகான கவிதை....

  பதிலளிநீக்கு
 5. மிச்சம் அதுவல வாழ்வினில் எச்சமே!
  துச்சம் இலையென் றறி!

  அருமை! யதார்த்தமான கவிதை!
  வாழ்த்துக்கள் தோழி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி தோழி...

   எச்சங்களை தாண்டி வாழ துணிந்தே சிரிப்புடன் தொடர்வதை உரைத்தன்...

   நீக்கு
 6. இப்படிக் கூட பிரிவைச் சொல்ல முடியுமா என்ன... அசத்தல்மா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சார்... எதுவும் நாம் எடுத்துக்கொள்ளும் விதத்தைப் பொறுத்துத்தானே :)

   நீக்கு
 7. பிரிவின் வலிகளை வெளிபடுத்தும் வரிகள் நல்லாருக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. ஆழமான கவிதை அழகான வரிகள் அருமை வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு