பக்கங்கள்

சிதறல் - 3மௌனம்

தொட முடியா தூரமாய் 
நீண்டு கொண்டே இருக்கிறது 
அவளின் மௌனம்
             ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ஓர் இலை 

மலரைப்போல 
மணம் பரப்பி வாழ்ந்திட 
ஒற்றைக் காலில் தவமிருந்தே 
சருகாகி உதிர்கிறது 
ஒருமரத்தின் இலை...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ஒரு காத்திருப்பு 

காத்திருப்பின் கடைசி 
நிமிடங்களின்
எல்லைக்கோட்டை தொடும்முன்
உருண்டு வந்த 
கண்ணீர் துளிகளின்
கோப்பை கலப்பில்
அர்த்தம் புரியாமலே 
முடிந்ததாய் முடிகின்றன 
மீளாத நினைவுகள்..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~உலகம் எப்பொழுதும் 
பரபரப்பாகவே இருக்கிறது 

சில நேரங்களில் 
கற்கள் எறிவதில் 

சில நேரங்களில் 
சிலுவைகள் செய்வதில்
--பிரியா 

22 கருத்துகள்:

 1. அனைத்து சிதறல்களும் அருமை...

  மிகவும் ரசித்தவை :

  மீளாத நினைவுகளோடு ஒரு மரத்தின் இலை...!

  பதிலளிநீக்கு
 2. மௌனம் சீக்கிரமா முடிய வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 3. எல்லாச் சிதறல்களுமே ரசனைக்கு விருந்தளிக்கத் தவறவில்லை. ஆனாலும் 1 ஐயும், 4 ஐயும் மிகமிக ரசித்தேன். கல்‌லெறிவதும், சிலுவைகள் செய்வதுமாக உலகின் இயல்‌பை சுருங்கச் சொன்ன விதம் நன்று!

  பதிலளிநீக்கு
 4. அனைத்துக் கவிதைகளுமே அருமை தோழி." ஓர் இலை" கவிதை மிகவும் இரசித்தேன்.வாழ்த்துகள் தோழி.

  பதிலளிநீக்கு
 5. தங்களின் தளம் அறிமுகம் : http://jeevanathigal.blogspot.com/2013/07/14-to-20-07-2013.html

  பதிலளிநீக்கு
 6. "உலகம் எப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது........."

  இந்த கவிதையின் அமைப்பில், அது உருவாக்கும் வேவ்ஸில், அதன் வார்த்தைகளில் அல்லது அது சொல்லும் விடயத்தில் ஏதோ ஒன்று அல்லது எல்லாம் அல்லது சில....இவ்வரிகளை மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டுகிறது. ஏன் இதே அமைப்பில் எழுதவே தூண்டுகிறது! இது ஏதேனும் வரையறை செய்யப்பட்ட குறுங்கவிதை வடிவமா? இதே அமைப்பில் உங்களது அல்லது நீங்கள் படித்த வரிகள் இருந்தால், அறியத்தாருங்கள்.
  மேலோட்டமாக நாம் புரிந்து கொள்வது நீங்கள் சொல்லவந்த ஆழத்தை எட்டியிருக்காது. அதன் சில பகுதிகளையும் பகிர்ந்தால் நல்லது.

  இக்கவிதையை அறிமுகம் செய்துவைத்த சாய் ரோசுக்கு மீண்டும் ஒரு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நண்பரே... முதலில் மழைச்சாரல் தளத்திருக்கு உங்களது முதல் வருகைக்கு என்னுடைய நன்றி... நீங்கள் குறிப்பிட்ட " உலகம் எப்போதும்" கவிதை ஒரு சாதரண குறுங்கவிதை வகையை சார்ந்ததே.. ஹைக்கூ அல்லது வேறு எந்த ஒரு தனிப்பட்ட வகையையும் சார்ந்தது அல்ல.. இயல்பான கவிதை, வார்த்தைகள் அமைந்த மற்றும் கோர்க்கப்பட்ட விதத்தின் காரணமாக உங்களுக்கு இப்படி தோன்றி இருக்கலாம்..இது எந்த வடிவத்தையும் சார்ந்தது இல்லை என்பதால் இதனுடன் கூடிய ஒத்த வடிவ கவிதையை என்னால் தர இயலவில்லை.. பல நேரங்களில் கவிதைகள் நாம் நினைத்ததை தாண்டி பல்வேறு வடிவங்களை எடுக்கின்றன, அதுபோன்ற ஒன்றாய் இதுவும் அமைந்திருக்க கூடும்..


   என்கவிதை வரிகள் உங்களை மீண்டும் மீண்டும் வாசிக்க துண்டியது குறித்து எனக்கு மகிழ்ச்சியே... தங்களுக்கு இன்னும் ஏதேனும் விளக்கம் வேண்டி இருப்பின் என் மினஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் priyaraju198601@gmail.com .. நன்றி :)

   நீக்கு
 7. மௌன இலை காத்திருப்பு பரபரப்பு அருமை வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. மௌன இலை காத்திருப்பு பரபரப்பு அருமை வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு