பக்கங்கள்

இரவு...இரவென்பது மாயங்களுடன் கலந்து
இமைகளை இணைத்து வைக்கும்
இயற்கையின் இரட்டை நாதங்களில்
இயல்பான ஒன்றாகவே

உறக்கத்தின் மயக்கத்தில் கிறங்கி
உதறிவிட்டுச் சென்ற அழகின்
உயரிய சொர்க்கமாய் - நிதமும்
உயிர்ப்புடனே இருக்கிறது...

கரிய இருளில் கலந்து
கவனிக்காமல் விட்ட விடயங்களை
கண்களாகிய ஒலிக்கீற்றால் தொடர்ச்சியாய்
காட்சிப்படுத்திக் கொண்டும்

துயரங்களை வெளிப் படுத்தும்
தேய்ந்து போன அழுகுரல்களை
தனக்குள்ளே அடக்கித் தானாய்
தனிமைப்பட்டும் நிற்கிறது...

உலகம் மறந்து விட்ட
உலகத்திடம் மறைத்து வைத்த
உன்னதமான பல கதைகளை
உள்ளுக்குள் கொண்டிருக்கிறது

மௌனமே வாழ்க்கையான பலருக்கும்
மௌனசாட்சியாய் நின்றே! இரவும்
மௌனமாய் காலங்களுடன் கலந்து
மௌனித்துப் போகிறது

இறுதியென்று ஒன்று ஆகும்வரை
இரவென்பது இரவா புகழுடன்
இயங்கிக் கொண்டே இருக்கும்
இயைபு மாறாமல்

--பிரியா

14 கருத்துகள்:

 1. உறக்கத்தின் மயக்கத்தில் கிறங்கி
  உதறிவிட்டுச் சென்ற அழகின்
  உயரிய சொர்க்கமாய் - நிதமும்
  உயிர்ப்புடனே இருக்கிறது...


  அழகிய இரவு மிக அருமை....

  வாழ்த்துக்கள் தங்கையே மென்மேலும் வளர்க ..!

  பதிலளிநீக்கு
 2. இரவின் அருமையை சொல்லி சென்ற கவிதை அருமை

  பதிலளிநீக்கு
 3. /// உன்னதமான பல கதைகளை
  உள்ளுக்குள் கொண்டிருக்கிறது... ///

  அருமை... உண்மை...

  வாழ்த்துக்கள் சகோதரி...

  பதிலளிநீக்கு
 4. ஆழமுள்ள வரிகள்! அழகான கவிதை! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்... :)

   நீக்கு
 5. எத்தனையோ ரசனைகளையும், எத்தனையெத்தனையோ ரகசியங்களையும் பொத்தி அடைகாக்கிறது இரவு. இரவின் பல பரிமொணங்களை இப்படிக் கவிதையில் சொல்ல முடியுமென்பது நான் எதிர்பாராதது. ஆச்சரியத்துடன் ரசித்துப் படித்தேன்!

  பதிலளிநீக்கு
 6. மெளனமே வாழ்க்கையான பலருக்கும்
  மெளனசாட்சியாய் நின்றே ! இரவும்
  மெளனமாய் காலங்களுடன் கலந்து
  மெளனித்துப் போகிறது.

  அழகான வரிகள். மிகவும் இரசித்தேன்.வாழ்த்துகள் தோழி !!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி... தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.. :)

   நீக்கு
 7. இரவின் அழகைக் கூறும் மோனைப் பாடல் அழகு...

  மோனை வசப்பட அழகாக கூறியுள்ளீர்கள்... வாழ்த்துகள்...

  எனது தளத்தையும் தங்கள் வலைப்பதிவு பட்டியலில் இணைத்துக்கொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்க்றது தோழி...

  மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்... :)

   உங்கள் தளத்தில் இருந்த குட்டி குட்டி கவிதைகள் மிகவும் அழகு ரசித்தேன் ஆதலால் இணைத்துள்ளேன்...

   நீக்கு