பக்கங்கள்

மரணம்

இன்னும் பலரை காவு கொள்ள காத்திருக்கும் சாதியின்  பெயரால்...
மரணம் பல சுவடுகளை
நம்முன் விட்டுச் செல்கிறது

சமூக சீரழிவின் எதிரொலியாய்
சில எழுந்து நிற்கின்றன

அழிக்கவே முடியாத வார்ப்பாய்
அவைகள் மாறிப் போகின்றன

இன்னும் எத்தனை மரணங்களை
இந்தச் சமூகம் சந்திக்கும்

இன்னும் எத்தனை காலங்களுக்கு
மனிதம் இப்படி கடக்கும்

எத்தனை முறை கேட்ப்பினும்
விடை இல்லா கேள்வியே..

இவனுக்காய் சென்ற பலபேர்
இவனையும் சேர்த்தே சென்றனரோ

வெறும் கண்களால் பார்ப்பவர்க்கு
மரணம் வெறும் காட்சியே

உணர்வுகளால் பீடிக்கப் பட்டவர்களுக்கு
மரணம் மாறாத ஓலம்

காரணம் எதுவாய் ஆகினும்
மரணம் உணர்வுகளுக்கோர் பேரதிர்ச்சி

காலத்துடன் மாறாமல் தொடர்வது
மரணத்தின் முகங்கள் மட்டுமே


-- பிரியா

8 கருத்துகள்:

 1. உணர்வுகளால் பீடிக்கப் பட்டவர்களுக்கு
  மரணம் மாறாத ஓலம்
  >>
  நிஜம்தான். எப்படியோ ஒரு உயிர் காதல், சாதி, கட்சியின் பெயரால் போக்கடிக்கப்பட்டது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் தோழி பிணந்தின்னிகள் வாயை திறந்து கொண்டு வெளிக்கிளம்பிவிட்டன...

   நீக்கு
 2. வார்த்தைகள் ஒவ்வொன்றும் மிக கடினமாய் இருக்கு ...மரணம் மாறாத ஓலம்.....மிக அருமை சகோ வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்றைய செய்தி உடன் ஒப்பு நோக்கினால் இந்த வார்த்தைகள் அத்தனை கடினம் அல்ல அண்ணா... மனம் எப்படி இன்னும் மென்மையாக சிந்திக்கிறதென்று தெரியவில்லை

   நீக்கு
 3. சாவே உனக்கொரு சாவு வராதா என்று ஒரு இரங்கல் கவிதையில் படித்ததுண்டு. அதுபோல என்ன செய்தால் இந்த சாதி அடிப்படையிலான சமூகத்தில் சாதிப்பித்து ஒழியும் என்றுதான் மனம் ஏங்குகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குழந்தைகளை வளர்க்கும் பொழுதே பெரியாரின் கருத்துக்களையும் பாரதியின் வரிகளையும் சொல்லி கொடுத்து வளர்த்த வேண்டும்.. அவர்கள் சமுகத்தில் அடி எடுத்து வைக்கும் பொழுதே பகுத்தறியும் அறிவுடையவர்களாக வளர வேண்டும்.. இது மட்டுமே இப்போதைய நிலையில் கண்முன் உள்ள தீர்வு...

   நீக்கு
 4. குழந்தைகளை பள்ளியில் சேர்க்கையில் ஜாதி, வேலைவாய்ப்பில் சலுகைகள் பெற ஜாதி என்று எல்லாவற்றிற்கும் ஜாதி தேவைப்படுகிறது. இப்படி மூலமாக வேரோடி விட்டதை எப்படிப் பிடுங்கி எறிவது? சாதிப் பற்று சாதி வெறியாக மாறி இப்படி பல உயிர்களைப் புசிப்பதைத்தான் சகிக்க இயலவில்லை. மனம் வருந்தி அழுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குழந்தைகளை பள்ளியில் சேர்க்கையில் எந்த சாதியும் இல்லை எந்த மதமும் இல்லை என்று குறிப்பிட்டு சேர்க்கவும் இந்திய அரசியல் சாசனம் அனுமதி அளித்துள்ளது... இது ஒரு தீவிரமான பிரச்சனைதான் ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டியதும் கூட..வேலைவாய்ப்பில் ஜாதி சலுகை என்பது அரசாங்க வேலை வாய்ப்பில் மட்டும் தானே, தனியாரில் அப்படி இல்லையே...

   நீக்கு