பக்கங்கள்

தொடருதல்....

தனித்த அறையினுள்
வீசியெறியப்பட்டிருந்த
காகிதம் ஒன்றினைக்
கண்டெடுத்தேன்


காகிதத்தின் மீதிருந்த
பேனா வடுக்கள்
சொல்லிச் சென்றன - அது
ஏதோ ஒன்றின்
எச்சமென்று

அதில் எழுதப்பட்ட
ஏதோ ஒன்று
என்னவாக இருக்ககூடும்
தனிமைத் துயரா,
காதலின் களிப்பா,
வெற்றியின் ஓங்காரமா
தோல்வியின் வெறுப்பா - இல்லை
அனைத்தையும் தாண்டிய
ஏதோ ஒன்றா?


யோசனைகளினூடே - என்
எழுதுகோலை எடுக்கின்றேன்
மீதமிருக்கும் பகுதியில் - என்னுடைய
ஏதோ ஒன்றினை எழுத.....--பிரியா 

2 கருத்துகள்:

 1. வணக்கம் பிரியா !

  உனக்குள் இருக்கும் அந்த ஏதோ ஒன்றை எழுதிவிடு
  ஊமைக்கும் கேட்க்கட்டும் உயிரில் !

  மிக அருமை மா தொடர வாழ்த்துக்கள்
  தம +1

  பதிலளிநீக்கு