பக்கங்கள்

புதுப் பொங்கல்

புதுப் பொங்கல்
==============

பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் 
முன்னோட்டம் ஓடுகிறது 
சின்னத்திரையில் 
"பொங்கல்னா லீவு 
எல்லார் வீட்டுக்கும் போலாம் ஜாலி"
இத்தனைதான் பொங்கலுக்கான 
தொகுப்பாளினியின் விளக்கம் 


சாப்ட்வேர்  ரோபோக்களுக்கும் 
பள்ளிக் குழந்தைகளுக்கும் 
இன்னபிற இயந்திரங்களுக்கும் 
பொங்கலென்றால் 
"லாங் லீவ் "

ஹாலோவேன் டே, வேலன்டைன் டே 
ஹோலி, ராக்கி 
புத்தாண்டு என 
பண்டிகைகளினூடே 
எங்கேயோ 
கொஞ்சம் கொஞ்சமாய் 
தொலைந்து கொண்டிருக்கிறது 
தைத்திருநாள் கொண்டாட்டம்.........

புது மஞ்சளிட்டு 
வாசலெல்லாம் கோலமிட்டு 
புதுக்கதிர்கள் அடித்து 
கால்நடைகள் அலங்கரித்து 
தோட்டத்திலே பட்டிகட்டி 
பொங்கலென்றால் என்னவென்று 
முழுவதுமாய் அறிந்திருந்த 
விவசாயக் குடிமகனோ -
இந்த வருட பொங்கலை 
எப்படிக் கொண்டாடவென்று 
யோசித்தபடி இருக்கிறார் 
"சைட் " அளந்து நடப்பட்ட 
நடுகல்லின் மீதமர்ந்து.......


--பிரியா 10 கருத்துகள்:

 1. வித்தியாசமான கவிதை நன்று தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்
  தமிழ் மணம் 2

  பதிலளிநீக்கு
 2. இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்
  ----------------------------------------------------

  தித்திக்கும் தைப்பொங்கல் திருநாள் தன்னில்
  ...........தீந்தமிழர் வாழ்வெல்லாம் சிறக்க வையம்
  எத்திக்கும் ஒளிகொண்டே ஏழ்மை என்னும்
  ..........இல்லாமை போக்கிடவே சமமாய் மாந்தர்
  சத்தியத்தில் வளர்ந்தொளிர வேண்டும் நல்ல
  .........சாதிசனம் ஒற்றுமையைச் சேர்க்க வேண்டும்
  பத்தியுடன் செய்கருமம் பலித்துத் தொன்மைப்
  .........பழந்தமிழாய் வாழ்வினிக்க வாழ்த்து கின்றேன் !

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தைபொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் தங்கையே வாழ்க வளமுடன்

  கவிதை அருமை டா
  தம 3

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  கவிதை நன்று

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு