பக்கங்கள்

இருளும் ஒளியும்....
விடைபெற நினைத்தேன்
முடிவாய் இன்று...
அடைபட்டு கிடந்த
நீண்ட இருளிடம்

முன்னேறி வருகிறேன்
மூச்சைப் பிடித்தே
வெளியே கசியும்
வெளிச்சம் நோக்கி

பிடித்திழுத்து நிறுத்தியது
பின்நின்று ஒன்று
திரும்பி தேடினேன்
கண்படவில்லை ஏதும்

உள்ளிருந்து ஒரு குரல்
உரக்கச் சொல்லிற்று
உற்றுப்பார் உன்னுள்
தடுப்பது நீதான்

உண்மைதான் உரைத்தது
மறுப்பதற்கு இல்லை
தடுத்தது என்னை
மனதின் நடுக்கம்

பயமென்ற ஒன்று
உண்டிங்கு லேசாய்
பயணத்தின் மீதல்ல
வெளிச்சத்தின் மீது

வெளிச்சம் என்னும்
உண்மை குறித்தும்
உண்மை உரிக்கும்
உன்னதம் குறித்தும்

வெளிச்சம் உண்மையில்
உணர்த்தியே செல்லும்
நானென்பதை யாரென்றும்
நீயென்பது இன்னதென்றும்

அதுகண்டு தானே
லேசாய் தயக்கம்
பின்னி நிற்கும்
கால்கள் இரண்டும்

என்னுள் நீயும்
உன்னுள் நானும்
கொண்ட உண்மைகள்
கொடிவிட்டு போகும்

விருப்பமில்லை எனக்கு
பிம்பங்கள் உடைவதில்
அதற்காய் குறித்த
நாளன்று இன்று

இன்னும் கொஞ்சம்
காத்து நிற்கிறேன்
இருளினை உடைத்து
ஒளியினை அடைய--பிரியா

19 கருத்துகள்:

 1. வெளிச்சம் உணர்த்திச் செல்லும் எல்லாவற்றையும் தெளிவாய்! நமக்குத்தான் கண்கள் கூசுகின்றன வெளிச்சத்தின் தரிசனத்தைப் பெறுவதற்கு! இருளினைக் கடந்து ஒளியை அடையக் காத்திருக்கிறேன் என்று சொன்ன ‌சிந்தனையின் கோணம் அருமை! மிக ரசித்தேன்!

  பதிலளிநீக்கு
 2. அருமையாக இருக்கிறது கவிதை...
  தெளிவான சிந்தனை நீரோட்டம்...

  பதிலளிநீக்கு
 3. யாரடா நீ உன்னுள்ளே பாரடா என்ற சுவாமிகளின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. வாழ்த்துக்கள் பிரியா. நல்ல நயம்.

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் தோழி!

  சகோ பாலகணேஷ் இன்று உங்கள் வலைப்பூ பற்றி தனது பதிவில் சொல்லியிருந்தார். அதைக்கண்டு இங்கு வந்தேன்.

  இங்கு உங்கள் கவிதரும் பொருள் மிகமிக அருமை!
  அதுதரும் நடையோ மேலும் பெருமை!

  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி... இங்கே வந்து வாழ்த்து சொன்ன தங்களுக்கும்.. என்னை அறிமுகம் செய்து வைத்த சகோதரர் பால கணேஷ் அவர்களுக்கும்.... :)

   நீக்கு
 5. வணக்கம் தோழி!

  சகோ பாலகணேஷ் இன்று உங்கள் வலைப்பூ பற்றி தனது பதிவில் சொல்லியிருந்தார். அதைக்கண்டு இங்கு வந்தேன்.

  முதல் விசயம் கவிதையின் அர்த்தம் எனக்கு பிடித்திருக்கிறது...

  இரண்டாவது எனது வலைத்தளத்தின் பெயரும் மழைச்சாரல் தான்...

  www.kathirrath.blogspot.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ! அப்படியா... மிகவும் ஆச்சர்யமாக உள்ளது... இதோ இபொழுதே அவர் வலை தலத்தில் சென்று பார்கிறேன் ... உங்களை வலைபூவும் இதே பெயரிலா... மிக்க மகிழ்ச்சி நிச்சயம் பார்கிறேன்....

   நீக்கு
 6. அன்பு ப்ரியா!
  திரு பாலகணேஷ் அவர்களின் வலைத் தளத்தில் உங்களைப் பற்றிப் படித்து இங்கு வந்தேன்.

  நம்மில் பலபேருக்கு வெளிச்சம் கண்டு பயம்!
  வெளிச்சம் என்னும்
  உண்மை குறித்தும்
  உண்மை உரிக்கும்
  உன்னதம் குறித்தும்

  நல்ல அர்த்தம் செறிந்த வரிகள்!

  தொடரட்டும் உங்கள் கவிதை பயணம்.

  வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்.... :) .. உங்களை போன்றவர்களின் ஆசியுடன் நிச்சயம் என் பயணம் தொடரும்.. :)

   நீக்கு
 7. அருமையான வரிகள். தொடருங்கள். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்.... :)

   நீக்கு
 8. இன்னும் கொஞ்சம்
  காத்து நிற்கிறேன்
  இருளினை உடைத்து
  ஒளியினை அடைய

  மிக்க அருமை சகோ .

  மேலும் வளர்க .....
  வாழ்கவளமுடன்

  பதிலளிநீக்கு
 9. இருளினை உடைத்து ஒளியினை அடைய காத்திருக்கும் சிந்தனை அழகிய கவிதையாக.

  பதிலளிநீக்கு
 10. * உண்மை குறித்தும்
  உண்மை உரிக்கும்
  உன்னதம் குறித்தும் *:-)

  பதிலளிநீக்கு