பக்கங்கள்

விடியாத இரவு..
விடியாமலே தொடர்கிறது
வெளிச்சமற்ற இரவு

எங்கேதான் சென்றதோ
எனக்கான மின்மினிகள்

எதைக்கொண்டு தேடுவது
தெரியாமல் தவிக்கின்றேன்

சாளரம்வழி கசியாதோ
கொஞ்சமேனும் வெளிச்சம்

ஏங்கியே பார்க்கிறேன்
அகண்ட வெளியில்

நட்சத்திரமும் மறைந்தது
கருமேக வெளியில்

இன்னமும் காத்திருக்கின்றன
நிரப்பப்படாத கோப்பைகள்

சாளர வெளிச்சம்
விழாத மேஜையில்

நிரப்பாத தேநீருக்காயும்
எடுக்காத கரங்களுக்காயும்


--பிரியா

14 கருத்துகள்:

 1. நல்ல கருத்துக்கவி படைத்தீர்! வாழ்த்துக்கள் தோழி!

  விடியாத இரவென விழிதேடும் வெளிச்சத்தை
  கடிதான மனங்கள் கரையும் கவிசொன்னீர்
  முடியாத வினாக்கள் முகமூடி மனிதர்கள்
  வடித்திட்ட கவிகண்டு வழங்கினேன் வாழ்த்துதனை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக அருமையான வரிகள்... மிக்க நன்றி தங்கள் வாழ்த்துகளுக்கு... :)

   நீக்கு
  2. மிக்க நன்றி தோழி... இங்கு இப்படி கவிக்கருத்து சொல்வதை ஏற்றுக்கொவீர்களோ என பயந்துகொண்டுதான் எழுதினேன். ஏற்றுக்கொண்டமை மகிழ்வைத்தருகிறது...:)

   நான் இப்போதான் இப்படி எழுதப் பழகி எழுதிக்கொண்டுவருகிறேன். எங்காவது கவிதைகள் கண்டால் கவிநடையிலேயே கருத்தெழுத ஆர்வம் ஆசை அதனால் எழுதிவிடுகிறேன். அதுவும் அவர்களின் வரவேற்பைப்பொறுத்து...
   மீண்டும் என் நன்றிகள்!

   நீக்கு
  3. கண்டிப்பாக எழுதுங்கள்... மிகவும் அருமையாக இருக்கிறது.... உங்கள் கருத்துக்களை சீராளன் அண்ணாவின் வலைபதிவிலும் பார்த்து உள்ளேன.. அருமையாக உள்ளது... நிச்சயம் தொடருங்கள்...

   நீக்கு
 2. இளமதி சிஸ்டர் மாதிரி கவிதையா கருத்துச் சொல்ல என்னால முடியலியேஏஏஏஏ... என்ன செய்ய... என் சாளரத்திலும் நிரப்பப்படாத கோப்பைகள் இருக்கத்தான் செய்கின்றன. அருமையான கருப்பொருள் தாங்கிய கவிதையை மிக ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி தங்களின் இந்த கருத்துக்கு மட்டுமின்றி நீங்கள் உங்கள் வலைப்பூவில் இன்று எனக்கு கொடுத்த அறிமுகத்திற்கும்... நான் எதிர் பார்க்காத அங்கீகாரம்... மிக்க மகிழ்ச்சி.. என் எழுத்துக்கான பொறுப்பை அதிகபடுத்தி உள்ளீர்கள்... :) ஹா ஹா! கவிதையாய் மட்டுமே கருத்து சொல்ல வேண்டியது இல்லையே... உங்களின் கருத்தும் அங்கீகாரமும் என்றுமே மதிப்பு மிக்கவைகள் தான் அவை எவ்வடிவில் இருந்தாலும்...

   நீக்கு
 3. தங்களின் ஏக்கம் கவிதையில் பளிச்சிடுகிறது...

  பதிலளிநீக்கு
 4. மின்னலுக்கு முன் மின்மினிகளின்
  வெளிச்சம் புலப்படுமோ
  மின்னலாய நீயே
  வெளிச்சத்தை வெளியே தேடினால் ...........................அருமை தோழி தொடர்கிறேன் ..........

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி... :) தன் வெளிச்சம் தனக்கே தெரியாத நிலையில் மின்னலாகிலும் மின்மினியாகிலும் இருட்டில் இருப்பதாகவே நினைக்கும் தானே... அதையே உரைக்க முற்பட்டேன்

   நீக்கு
 5. கவிதைக்கு வாழ்த்துக்கள்...

  (http://minnalvarigal.blogspot.com/2013/04/17.html) மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி தங்கள் வருகைக்கு... தொடர்ந்து வந்து ஊக்கம் கொடுங்கள் இன்னமும் எழுத... :)

   நீக்கு
 6. எங்கேதான் சென்றதோ
  எனக்கான மின்மினிகள்


  எங்குமே செல்லவில்லை
  இங்குதான் சுற்றிக்கொண்டிருக்கிறது
  உனக்கான வெளிச்சங்களை சுமந்துகொண்டு

  மிக அருமை சகோ
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு