பக்கங்கள்

கரையும் காலம்....


நேற்றும் இப்படிதான்
நாளையும் இப்படியே
மாற்றங்கள் இன்றி
தொடரும் வாழ்க்கை

எல்லைகள் தேடி
தொடங்கும் பயணங்கள்
முடிவே இல்லாமல்
முடிந்ததாய் இங்கே

யுகங்கள் கடக்கும்
எண்ண வேகம்
தடைகள் இன்றி
தனிமை வெளியில்

என்னை கொஞ்சம்
கேட்டுப் பார்த்தேன்
எரியும் நெருப்பில்
தணல்கள் எத்தனை

காற்று வெளியில்
காண வெள்ளம்
யுககால மௌனம்
உடையும் தருணம்

கணங்கள் தோறும்
கரையும் காலம்
நினைக்க நேரமின்றி
கடக்கும் மணித்துளிகள்
--பிரியா

2 கருத்துகள்:

  1. நினைக்க நேரமின்றி
    கடக்கும் மணித்துளிகள்// உண்மை


    தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. நன்றி... தங்களுக்கும் என்னுடைய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு