பக்கங்கள்

சாளரமும் நானும்...
எனக்கான ஏதோ ஒன்றை
எப்போதும் தன்னகத்தே கொண்டிருக்கும்
என் சாளரம்

வாசம் மறந்த செடிகள்
நிலவு அற்ற வானம்
விண்மீன் மறைத்த மேகம்

புல்லில் வந்த பனித்துளி
பூவை முகரும் வண்டு
பறந்து செல்லும் பட்டாம்பூச்சி

இப்படி ஏதேனும் ஒன்றை
எப்போதும் எனக்காய் - தினம்
காட்டிக்கொண்டே இருக்கும்

இதை போன்ற காட்சிகளுடன்
எப்போதும் இணைந்தே இருக்கும்
என்னுடைய காத்திருப்புகளும்

எதை எண்ணி? யாருக்காய்?
எதற்காக? எப்போதிருந்து? - அறியேன்
ஆயினும் காத்திருக்கிறேன்

வருவதாய் சென்ற தோழி
வரவே வராத மழை
வந்தவழியே சென்ற சூரியன்

இப்படியே நீண்டு செல்லும்
என் காத்திருப்புகளின் பட்டியல்
நேற்றும் இன்றும்

ஆயினும் காத்திருக்கிறேன், பார்த்திருக்கிறேன்
என் சாளரத்தின் கம்பிகளுடனும்
நீங்காத நினைவுகளுடனும்


--- பிரியா

14 கருத்துகள்:

 1. அருமை. நன்றாக உள்ளது கவிதை. வாழ்த்துக்கள் தோழி!...

  காத்திருக்கும் கவியதனில் காண்பித்த காட்சிகளோ
  பார்த்திருந்த கண்களுக்கு படைத்திட்ட விருந்தாகும்
  வார்த்துவிட்டீர் ஓவியமாய் வழமான சொற்களிலே
  யாத்துவிட்ட பாகண்டு வாழ்த்தினேன் வாழியவே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.. :)

   நீக்கு

 2. பூத்திருக்கும் தேடல் கொண்டு
  காத்திருக்கும் கவியதனை
  நேர்த்தியாய் சொன்னவிதம்
  நினைவெல்லாம் படிகிறது

  மிக அருமை சகோ
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. சாளரத்தின் வழியே நீங்கள் காட்டிய அழகுகளை நானும் மிகமிக ரசித்தேன்!

  பதிலளிநீக்கு