பக்கங்கள்

ஒரு மடந்தையின் புலம்பல்...


எத்தனை வலிகள்
எத்தனை சுமைகள்
என்னால் எனக்காய்
எத்தனை அம்மா!தோளில் சுமந்தது
போதாதென்றா அப்பா
மனதிலும் சேர்த்து
சுமைகளை சேர்கின்றேன்

மங்கையின் ஜனனம்
மதிப்பற்ற நாட்டில்
மரணம் கூட
மண்ணின் வாசம்

எத்தனை யுகங்கள்
கடந்து போயினும்
மதிப்பற்று போனோம்
மடந்தைகள் நாங்கள்

வளரும் வரை
தேவதைகள் நாங்கள்
வளர்ந்த பின்போ
தீராத வதைகள்...

தாயின் வயிற்றில்
உதித்த கணமே
உரைத்திருந்தால் யாரும்
மரித்திருப்பேன் அப்போதே!

விடியல்கள் தேடி
விடைகளைத் தேடி
விடைபெற்றுப் போனோம்
விளங்காத புதிராய்!


--பிரியா

2 கருத்துகள்:

 1. மிகச் சிறந்த படைப்புகள் தங்கள் மூலம்
  நிச்சயம் தமிழுக்கு அழகு சேர்க்கும் என
  தங்கள் கவிதைகளின் கருத்தையும்
  சொல்லும் நேர்த்தியையும் படித்ததும்
  புரிந்து கொள்ள முடிகிறது
  மனம் கனிந்த நல் வாழ்த்துக்கள்
  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. மிக்க நன்றி... :) என்னால் முடிந்தவரை என் கருத்துக்களை நன்றாக எழுத முயற்சிக்கிறேன்..தங்களை போன்றவர்களின் ஊக்கமும் பாராட்டும் நிச்சயம் அதற்கு உதவியாய் இருக்கும் தங்களுக்கும் என்னுடைய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... :)

  பதிலளிநீக்கு