பக்கங்கள்

ஒற்றை இலை.....




நான் இலை
ஒற்றை இலை

மரத்தை பிரிந்து
தனியே வந்தேன்

காற்றுடன் கலந்து
வழியே செல்கிறேன்

தடைகளும் இல்லை
தயக்கமும் இல்லை

கட்டிப் போடவும்
விலங்குகள் இல்லை

எட்டிப் பறிக்கவும்
எவரும் இல்லை

எனக்கான வழியில்
எல்லைகள் இல்லை

சுற்றி திரிகிறேன்
வெட்ட வெளியில்

காற்றின் பாதையில்
எந்தன் பயணம்

இக்கிளையில் தொடங்கி
அக்கிளையில் இளைப்பாறி

நீண்டு நீண்டு
இன்னும் நீண்டு

தொடர்ந்தே செல்கிறேன்
தொல்லைகள் இன்றி

எந்தன் வாழ்க்கை
எந்தன் மகிழ்ச்சி

பறக்கிறேன் நான்
பாரங்கள் இன்றி


--பிரியா


2 கருத்துகள்:

  1. இந்த ஒற்றை இலை போல் எந்த பந்தமும் அற்று, தனக்கான பாதையில் தடங்கல் எதுவும் இல்லாமல் தேசாந்திரியாகப் பறக்க மனம் துடித்தாலும் இயல்பு வாழ்வின் கட்டுப்பாடுகள் சங்கிலி போட்டுக் கட்டி விடுகின்றன எம்மை! மனம் ஒன்றி ரசிக்க முடிந்தது இக்கவிதையை! சூப்பர்ப்!

    பதிலளிநீக்கு
  2. தன்னிலையை விட்டு கொடுக்காமல், இயல்பு மாறாமல் வாழ்வதும் கூட இங்கு பொருந்துமே...

    பதிலளிநீக்கு