பக்கங்கள்

பொம்மையும் நானும்....



எப்பிறவியில் செய்த பாவமோ
இப்பிறவியில் தனியாய் பிறக்க
சபித்துவிட்டார் கடவுள்



அக்காளும் தங்கையும் இல்லை
அண்ணனும் தம்பியும் இல்லை
உயிரோடுடன் பிறப்பாய் யாருமில்லை

ஆறுவயதில் அழுதேன் அன்னையிடம்
எனக்கு மட்டும் விளையாட
ஏன் அண்ணனில்லை என்று

என்னுயர பொம்மையொன்றை
பரிசாக அளித்து - இதனுடன்
விளையாடு என்றால்

பத்துவயதில் மீண்டும் அழுதேன்
பள்ளிதோழிக்கு அக்காள் உண்டு
எனக்கு எங்கே

இம்முறை கிடைத்தது பரிசாக
கண்சிமிட்டும் பொம்மையொன்று
தலைவாரி பூச்சுட வாகாக

வளர்ந்தபின் திரும்பி பார்த்தால்
என் இல்லாத பட்டியலில்
இணைந்தது பொம்மையும்

என்னுள் ஒரு கேள்வி
எதற்காக அழ இப்பொழுது
என்ன கிடைக்கும் பரிசாக



--பிரியா


4 கருத்துகள்:

  1. மற்றுமொரு அருமையான கவிதை... என்ன கவிதை மழை இன்று பொழிந்து கொண்டிருக்கிறதே??

    பதிலளிநீக்கு
  2. ப்ரியாவின் காட்டில் எப்பவும் கவிதை அடைமழைதான் நண்பா! எப்படி இத்தனை ரசனையா, இவ்வளவு வேகமா கவிதை எழுத முடியுது இவங்களாலன்னு வர்றப்பல்லாம் எனக்கு மிக வியப்பு! இப்போ இந்தக் கவிதையப் படிச்சப்பக் கூட!

    பதிலளிநீக்கு