பக்கங்கள்

ஒளி காட்டும் வழி


தீமையொழிந்து நன்மை பெருகிட
துன்பமழிந்து இன்பம் செழித்திட 
வெடிக்கட்டும் வெடிகள் திசையெங்கும்

இல்லாதோரும் இன்புற்று மகிழ
இனிப்பு பலகாரங்களில் பெருகட்டும்
பகிர்ந்தளிக்கும் சமத்துவ மாண்பு

மூடநம்பிக்கை இருளினை நீக்கி
பகுத்தறிவு வெளிச்சம் பரவிட 
எரியட்டும் தீபங்கள் ஓராயிரம் 

ஒலிஒளி வெள்ளமாய் இரவு 
உரைக்கட்டும் இவ்வுலகிற்க்கு - புது 
பாதைதனை தேர்ந்திட்டோம் நாங்களென்று 

உலகெங்கும் பரவட்டும் 
ஒளிசிந்தும் பாணங்களின் வேகம் 
நம் வெற்றியை பரைசாட்ட

வீறுகொண்ட வேங்கைகள் சேரட்டும்
புதுப்பாதைகள் எங்கும் நிறைந்ததாய் 
புதுப்பயணங்கள் பல செறிந்ததாய்

புனிதங்கள் கட்டி அமைத்த
பிம்பங்கள் பொழிந்திட - தொடரட்டும்
பயணங்கள் ஒளிகாட்டும் வழிதனிலே-- பிரியா

அனைவருக்கும் இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துக்கள்...

28 கருத்துகள்:

 1. வணக்கம் சகோதரி.
  நல்லதொரு கவிதை ஆங்காங்கே ஆயிரம் வாலா சரவெடியாய் வெடித்தும் மத்தாப்பாய் சிரித்தும் தீபவொளியைக் காட்டும் வழியைச் சொல்கிறது. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  கவிதையின் வரிகள் மிக மிக அழகு...வாழ்த்துக்கள்
  இது ரூபனின் கவிதைப் போட்டிக்காக எழுதிய கவிதையா????

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. கவிதை அருமை... இணைப்பை நடுவர்களுக்கு அனுப்பி வைக்கிறேன்... கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி...

  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 4. அழகிழ வாண வேடிக்கைகளுடன்
  வெற்றியைப் பறைசாற்றும் இனிய தருணமும்
  எமக்கமைந்திட வேண்டி அழகிய கவியில் சொன்னீர்கள்.

  மிகமிக அருமை!

  போட்டியில் வெற்றிபெற நல் வாழ்த்துக்கள்!

  அனைவருக்கும் தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 5. தீபாவளியை பகுத்தறிவு தீபவொளியாய் மாற்றி கவிதை வரிகள் அனைத்தும் அருமை பாராட்டுக்கள் சகோதரி

  பதிலளிநீக்கு
 6. அருமை! போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 7. சிறந்த கவிதை. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 8. கடைசி வரிகள் அருமை...இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கலியபெருமாள் சார்... தங்களுக்கும் என் வாழ்துக்கள்

   நீக்கு
 9. நீங்கள் கூறியிருக்கும் 'பகிர்ந்தளிக்கும் சமத்துவ மாண்பு' ரொம்பவும் பிடித்திருக்கிறது, பிரியா.
  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.
  தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி அம்மா தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.... உங்களுக்கும் என்னுடைய தீபத் திருநாள் வாழ்த்துக்கள்... :)

   நீக்கு
 10. அழகான, நற்சிந்தனைகளை விதைக்கும் கவிதை! ஒளிகாட்டும் வழியினில் பிரகாசமாய் தீபாவளி இனித்திட, என்றும் வாழ்வில் இனிமை மலர்ந்திட உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 11. ஆழமான கருத்துக்கள்,இனிய நற் கவிதை இனிதே நல்கினீர்....!நன்றாகரசித்தேன்.....!

  தீப ஒளியாய் திகழும் வாழ்வு
  தினமும் மகிழ்வு பொங்கும் வாழ்வு என்றும் பெற உளமார வாழ்த்துகிறேன்....! போட்டியில் வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன்....!
  என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.....!

  பதிலளிநீக்கு
 12. வணக்கம்

  தங்களின் மின் அஞ்சல் சுமந்த கவிதை வந்து கிடைத்து விட்டது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது தங்களின் போட்டிக்கான கவிதை நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்.

  போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்
  இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.....
  என்பக்கம் புதிய பதிவாக கவிதைப்போட்டியில்பங்குபற்றியவர் தகவல் விபரம்-http://2008rupan.wordpress.com

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 13. அருமையான கவிதை தோழி. போட்டியில் வெற்றி பெற இனிய வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு