பக்கங்கள்

ஒரு மௌனம் ஒரு காதல்அருகருகே பயணித்தும்
கண்கொண்டு பார்த்தும்
பேச்சினைக் கடந்து
மௌனிகளாகவே தொடர்கிறோம்
நானும் சாலையோர மரமும்

எங்களுக்குள் கதைக்க
எவ்வளவோ இருந்தும்
மௌனத்திலேயே கரைகின்றன
எழுத்துக்களற்ற எங்களின்
எண்ணப் பரிமாற்றங்கள்

தேர்ந்ததொரு புரிதலில் 
கிளைகளை அசைத்து 
சம்மதம் சொல்கின்றன 
என் மௌனங்களும்
தங்களுக்கு அர்த்தப்பட்டதாய்மறுத்துப் பேசாத 
மௌனக் காதலன் 
கிடைத்த மகிழ்ச்சியில்
குதூகலமாய் - என் காதல்
கிளைகளுடனும்  மரங்களுடனும் 

வார்த்தைகளைத் தேடும்
அவசியம் ஒழிந்ததில்
தடைகளைத் தாண்டிய,
எண்ணங்கள் மிதக்கின்றன
ஏகாந்த வெளியில்


-- பிரியா

33 கருத்துகள்:

 1. க்வலிங் க்வீன் சகோதரி இளமதி.... அவர்களின் மூலம் அறிமுகம்...

  ரொம்ப நல்ல எழுதுறீங்க வாழ்த்துக்கள் ...

  மனசு விட்டு பேசுங்க மரங்கள் பேசும் உங்களோடு.,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியா வாருங்கள் சகோதரி... என் தளத்திற்க்கு வரவேற்க்கிறேன்.... தங்கள் வாழ்துக்களுக்கு மிக்க நன்றி தொடர்ந்து வாருங்கள்...

   நீக்கு
 2. மெளனமே காதலாய், அந்த மெளன மொழியைப்புரிந்து கொண்ட பரஸ்பர சினேகிதத்திடம் எத்தனை அன்பு! அன்பை வெளிப்படுத்த வெறும் வார்த்தைகளை விடவும் சில சமயங்களில் மெளனம் மட்டுமே போதுமானதாக ஆகிறது! உணர்வுகளை வழக்கம்போல மிக அழகாய் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் ப்ரியா! இனிய வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 3. :) ஆமாம் அக்கா ! எண்ணங்களுக்கு எந்த மொழியும் தேவை இல்லை தான், மரமும் கூட மனதை புரிந்து கொள்ளும், பாழாய்ப் போன மனித மனதில்தான் நமக்குள்ளாக இருக்கும் வார்த்தைகளில் சிதைபட்டுப் போகின்றன பெரும்பான்மையான நேரங்களில் பிறர் நமக்களிக்க வரும் எண்ணங்கள் கூட. ஏதுமற்று இருக்கும்போதே எல்லாமும் புரிகின்றன..ஏகாந்த வெளியில் மரத்துடன் வார்த்தைகள் இன்றி பயணித்த உங்கள் மனதை வார்த்தைகளில் சொல்லியமை அருமை :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் தம்பி, மௌனம் பல விடயங்களை புரிய வைக்கும்...

   நீக்கு
 4. வணக்கம் சகோதரி.
  இளமதி சகோதரியின் அறிமுகத்தால் தங்கள் வலைப்பக்கத்தில் நான். தங்கள் கவிதையும் தளமும் அருமை. வாழ்த்துக்கள்.
  பச்சை மரங்களுடன் நீங்கள் பேசிய வார்த்தைகள் பசுமை மாறாமல் எங்கள் காதுகளிம் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இன்னும் பேசுங்கள் பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ.... மிக்க நன்றி சகோ தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்... தொடர்ந்து வாருங்கள்... :)

   நீக்கு
 5. மரத்தை தன் சகோதரியாய் பாவித்து அதனடியில் காதல் செய்யக் கூடாது, என் சகோதரி பார்ப்பாள் என்று சங்க இலக்கிய்த் தலைவி ஒருத்தி சொல்லுவாள். மரமும் மனிதமும் ஒருங்கிணைந்து உணர்வு பரிமாற முடியும் & மனதிருந்தால் என்பதை அழகாகச் சொல்லிய உங்களின் கவிதையை மிக ரசித்தேன் ப்ரியா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சங்கத் தலைவி மரத்தை தன் சகோதரியாய் கொண்டதால் தயங்கினால், இங்கு மரமே என் காதலாய் போனதால் தயக்கங்கள் அனைத்தும் ஒழிந்து போயின... ;)

   நீக்கு
 6. நல்ல கற்பனை. மரம் நடுவதை வலியுறுத்துவதாகவும் தெரிகிறது. சாலையோர மரங்கள்..மவுனம்..... தங்களை வெட்டிவிடுவார்களோவென பயந்து போயிருக்கலாம்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பல நேரங்களில் நாம் தான் மௌனத்தை சம்மதம் என்று எடுத்துக் கொள்கிறோமே... ம்ம்ம்ம்... அதன் மௌனம் கலையும் போது தெரியும் நம் பாடு...

   நீக்கு
 7. அழகான கவிதை. என்னுடைய தொலைதூர பேருந்து பயணங்களையும், எண்ணிலடங்கா புது நண்பர்களைப் பெற்று விட்டதைப் போன்ற உள்ளப் பெருமிதத்தைத் தந்த மரங்களும் நினைவுகளில் நிழலாடின.

  வாழ்த்துகள் தோழி.

  பதிலளிநீக்கு
 8. மௌனமாய்க் காதல்
  மரத்தோடும் கொண்டிங்கு
  மெல்லினமாய்த் தீண்டிய
  மென்மையை என்னசொல்ல...

  அழகாய் ஒரு கற்பனை. அதைவிட அழகாய் அமைந்த
  கவிவரிகள்.. மனதை மயிலிறகால் வருடியது பிரியா...
  மிகவும் ரசித்தேன்.
  வாழ்த்துக்கள்!

  உங்களை என் வலைத்தளத்தில் பதிவோடு பகிரும் பதிவராகப் பகிர்ந்தபின் உங்களிடமே வரமுடியாமல் உடல்நிலை பாதிப்பு... தாமதத்திற்குப் பொறுத்தருள்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதலில் என் தளத்தை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி தோழி, பின்பு இப்போதைய கருத்தினிர்க்கும்... அடடா அப்படியா இப்பொழுது தங்கள் உடல் நலம் எப்படி உள்ளது, நிச்சயமாய் விரைவில் சுகமடைவீர்கள்... நானும் தங்களுடைய அறிமுகத்தை நீங்கள் பதிவிட்ட சில நாள்கள் கழித்தே பார்த்தேன்... மிகப் பெரிய இன்ப அதிர்ச்சி அது... உங்களின் அறிமுகத்தினால் நிறைய நண்பர்கள் என் தளத்திர்க்கு வருகை புரிந்தனர்... உங்களின் தயவில் நிறைய புதிய நண்பர்களை அடைந்ததில் மிகப் பெரிய மகிழ்ச்சியே...

   நீக்கு
 9. மௌனம் அர்த்தமுள்ளது மௌனம் அழகானது மௌனம் சிறந்த மொழி நயமான வார்த்தைகள் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 10. மௌனத்தின் அழகு, மரத்தின் காதல் ...அருமையானக் கவிதை பிரியா!

  பதிலளிநீக்கு
 11. மௌனம் கலைந்து சூறாவளியாய் தாக்கும்போது தெரியும் அதன் வேகம்...

  பதிலளிநீக்கு
 12. அழகிய கவிதை படைப்பு...

  புரிதலிலே இருக்கிறது வாழ்க்கை

  பதிலளிநீக்கு
 13. வணக்கம்
  இயற்கையின் இரசனை மிக்க கவிதை எழுதிய விதம் அருமை வாழத்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 14. இயற்கையின் இன்பமான விளையாட்டே இப்படி எல்லோரையுமே படுத்துகிறது

  பதிலளிநீக்கு
 15. மௌனம் கொண்ட
  மரங்களின் காதல்
  மனதினை நனைத்து
  மகிழ்வினை தந்தது

  மிக அருமை பிரியா

  வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  பதிலளிநீக்கு
 16. ...................(என்ன புரிய வில்லையா ?மௌனமாய் உங்கள் கவிதைக்குப் பாராட்டு !)
  த .ம +1

  பதிலளிநீக்கு