பக்கங்கள்

நம்பிக்கையுடன்....பரிதாபத்திற்குறிய நாட்களின்
கடைசி பகுதியின்
இறுதி நொடிகளில்
நிற்கிறது வாழ்வு

நாளைய பொழுதின்
நீங்காத நம்பிக்கையுடன்
நீள்கிறது பொழுதுகள்
எதிர்வரும் பாதையினூடே

கண்ணீர் விட்டழுத
நேற்றைய பொழுதின்
நியாபகங்களின் ஊடே
நினைவுகளைத் தேக்கியபடி

கன்னத்தில் விழுந்திட்ட
கண்ணீர் துளிகள்
சட்டென கரைகின்றன
காற்றில் கற்பூரமாய்

கரைகளைக் கடந்து
தடைகளைக் கடந்து
தொடர்கிறது வாழ்க்கை
வாழ்வோமென்ற நம்பிக்கையுடன்--பிரியா

23 கருத்துகள்:

 1. கவிதைக்கான படம் செம !! இந்த கவிதயை வாசிக்கும்போது "ஒவ்வொரு பூக்களுமே ...." பாட்டு பேக்ரவுன்ட்ல கேக்குது :)
  நம்பிக்கை நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்...!!

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் சகோதரி..
  நம்பிக்கை தானே வாழ்க்கை. நிச்சயம் நீங்கள் செல்லும் பாதை நல்வழி தான் தன்னம்பிக்கையோடு நடை போடும் போது... அழகான கவிதை. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. நம்பிக்கைதானே நம்மையும் நாட்களையும்
  நகர்த்தும் நற்துணை!

  அருமையான கவிதை! நல்ல சிந்தனை!
  வாழ்த்துக்கள் பிரியா!

  த ம.2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோ வாழ்த்துக்கும் தமிழ் மணம் வாக்கினிர்க்கும்...:)

   நீக்கு
 4. வணக்கம்
  நம்பிக்கை மிக்க வரிகள் அருமை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 5. பதில்கள்
  1. நன்றி சகோ... தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்... தொடர்ந்து வாருங்கள்... :)

   நீக்கு
 6. பதில்கள்
  1. மிக்க நன்றி தனபாலன் சார்... இன்னும் உங்கள் கணிப்பொறி சரியாகவில்லையா?

   நீக்கு
 7. நம்பிக்கையூட்டும்
  நல்வரிகள் உயிரூட்டும்
  தும்பிக்கையாகி
  துணிவு தரும் வாழ்வில்

  அத்தனையும் அருமை பிரியா

  வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  பதிலளிநீக்கு
 8. கண்ணீர்த் துளிகள் காற்றில் கரைகின்றன கற்பூரமாய்...! அழகு! கடைசிப் பாரா தரும் தன்னம்பிக்கை ஒன்றே தொடர்ந்து நடைபோடத் தேவையானது வாழ்வில்! பாஸிடிவ் கவிதைக்கு ஒரு ரெட் ஸல்யூட்!

  பதிலளிநீக்கு