பக்கங்கள்

சகியே .....

நோக்கும் இடத்திலெல்லாம் - சகியே
உந்தன் நிலவு முகத்தினினால் 
காணும் பெண்ணிலெல்லாம் - சகியே 
என்மனம் காதல் கொள்ளுதடி

கேட்கும் ஓசையெல்லாம் - சகியே 
நின்குரல் ஆனதினால் 
மீட்டும் இசையிலெல்லாம் - சகியே 
நீயோர்  ராகமாய் வந்தாயடி 

வீசும் காற்றிலெல்லாம்  - சகியே  
நின் வாசம் நுகருவதால் 
பூக்கும் பூவிலெல்லாம் - சகியே 
உனையன்றி ஏதும் மலர்ந்திலையே 

வாழும் நாளில்லெலாம் - சகியே 
வண்ணமாய் வந்து திர்த்தாய் 
என்னென்று சொல்வேனடி  - சகியே 
பேதைஉன் பேரன்புக் கீடில்லையே 

உற்றம் சுற்றமெல்லாம்  - சகியே 
நீயென்று மாறிய பின் 
வாழும் வாழ்க்கையிலே - சகியே 
நீயின்றி எங்கனம் நகர்ந்திடுவேன் 

வந்து சேர்ந்திடடி - சகியே
வாழ்வில் வசந்தம் வந்துதிர்க்கும் 
அன்றில் கொன்றுதீர்த்திடடி - சகியே 
மரணம்  இன்னும் இனித்திடுமே  


--- பிரியா 16 கருத்துகள்:

 1. //பார்க்கும் இடத்திலெல்லாம் உனைப் போலவே பாவை தெரியுதடி !//
  inspired by பாரதியா !!
  //பார்க்கும் பெண்ணிலெல்லாம் காதல் கொள்வதற்கான சமாளிப்பிகேசன்ஸ் சா !!

  :) நல்ல சந்தநயம் !

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  அருமையான காதல் கவிதை... தவிப்பு பற்றி ஒவ்வொரு வரியிலும் அழகாக சொல்லியுள்ளிர்கள் மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. /// நீயின்றி எங்கனம் நகர்ந்திடுவேன்... ///

  எங்கும் எதிலும்...

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 4. கவிதை அருமை படிக்கும் வரிகளெல்லாம் பாரதியின் நினைவலையாய் வாழ்த்துக்கள் சகோதரி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எழுத்து எண்ணம் அனைத்திலும் நிறைந்திருக்கும் ஒருவனின் பாதிப்பின்றி எதுவும் எழுதுதல் கடினம் கவி நாகா சார்... நன்றி தங்கள் வருகைக்கும் வாழ்ட்ஹ்துக்கும் :)

   நீக்கு
 5. எல்லாரும் சொன்னது போல பாரதி தான் நினைவ்ற்கு வருகிறார் ...! அழகு ..!

  பதிலளிநீக்கு
 6. ஹய்யய்யோ.... முதல் பாராவில் சொன்னபடி நடந்தால் நம் கன்னம் என்னாவது? (கன்னத்தில் முத்தமிட்டால்ன்னு பாரதி சொன்னதுக்கே ‘யார் கன்னத்துல முத்தமிடறோம்கறதப் பொறுத்து இருக்கு நம்ம கன்னம் வீங்கறது’ன்னு சொன்ன ஆசாமி நானு) முண்டாசுக்காரனின் ஸ்டைலை மட்டும் அடியொற்றி நீங்கள் புனைந்திருக்கும் இந்தக் கவி (வழமை போல) வெகு இனிமை. மிக ரசித்தேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா கன்னம் உப்பி போனா நாம இன்னும் அழகாய்டுவோம் சார்... (எப்படி எல்லாம் யோசிக்கிறோம் பாருங்க :P ).... கன்னத்தில் முதமிட்டால் பாட்ட வீட்டுக்குள்ள் மட்டும் பாடுனோம்னா பாடுற நம்க்கோ இல்ல கேக்குற மத்தவங்களுக்கோ யாருக்குமே பிரச்சினை இருக்காதே :P

   நீக்கு