பக்கங்கள்

அழகிய விடியல்

களிப்புகள் நிறைந்த
விடியல் ஒன்றினில்
இரசிக்கிறது மன்ம்
காண்பவை அனைத்தையும்


பலநூறு நினைவுகள்
பல்லாயிரம் கவலைகள்
எதுவுமே இல்லை
எண்ணங்களற்ற மனமதில்

இரசிப்பவை அனைத்தும்
எண்ணத்தில் அடைத்து
இதயத்தில் நுழைந்திட
தடைகளென்று எதுவுமில்லை

இராச நடையிட்டு
இராகங்கள் மீட்டி 
குதிக்கின்றது மனம் 
கும்மாளங்கள் இட்டு 

எனக்கான நாளிது
எழிலாகப் புலர்ந்தது 
குயிலுடன் போட்டியாய்
கூப்பாடு போட்டு 

எப்படியோ இன்று 
விடிந்ததொரு பொழுது
உலகத்து மகிழ்ச்சிகள்
அனைத்தையும் சேர்த்து --- பிரியா21 கருத்துகள்:

 1. வணக்கம்

  கவிதயைின் வரிகள் அருமை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ரூபன் தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்... :)

   நீக்கு
 2. ''எனக்கான நாளிது எழிலாகப் புலர்ந்தது'' அழகிய சிந்தனை அருமையான ரசிக்கும் படியான வரிகள்.பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி வியாபதி தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் :)

   நீக்கு
 3. ''எனக்கான நாளிது எழிலாகப் புலர்ந்தது'' அழகிய சிந்தனை அருமையான ரசிக்கும் படியான வரிகள்.பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 4. பிறக்கின்ற நாள் அனைத்தும் எமக்காகவே பிறக்கின்றது..
  இனிமையையும் அதன் எழிலையும் நாமேதான் கண்டு களித்தல் வேண்டும்..

  அழகிய வரிகளுடன் அருமையான் கவி தோழி!
  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி தோழி தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்... :)

   நீக்கு
 5. இதயத்தில் நுழைத்திட யாருக்குமே தடை இல்லை என்பது உண்மைதான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பல நேரங்களில் மனதில் நிறைந்துள்ள எண்ணங்களைப் பொறுத்தும்...

   நீக்கு
 6. எனக்கான நாளிது
  எழிலாகப் புலர்ந்தது
  குயிலுடன் போட்டியாய்
  கூப்பாடு போட்டு .....

  அருமை பிரியா

  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. இதுபோன்ற கவிதைகளைப் படித்துத்தான் மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது...எதிரில் வருபவை எல்லாம் வேகத்தடைகளாக இருந்தால் எப்படியோ சமாளித்துச் சென்றுவிடலாம்..ஆனால் படுகுழிகளிலும் போக்குவரத்து நெரிசல்களில் சிக்கி வீடு வந்து சேர்வதற்குள் வாழ்க்கை எனக்கானதாக இல்லை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹ்ம்ம்ம்....அப்படியானா நாட்களை நிதமும் கடந்து வருவதால்தான் நமக்கான நாளாக என்றானும் ஒரு நாள் புலர்கையில் அது கவிதையாய் மாறுகிறது ...

   நீக்கு
 8. இன்று புதிதாய் பிறந்தோம்!
  புதிய விடியலை மழலையாய்
  மாறி ரசிப்போம்!... தங்கள் கவிவரிகள் அனைத்தையும் ரசனைகள். அழகான பகிர்வுக்கு நன்றீங்க சகோதரி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோ தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்...தொடர்ந்து வாருங்கள்..

   நீக்கு
 9. வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசிக்க வேண்டும். ஒவ்வொரு தினமும் எனக்காகவே புலர்கிறது என்ற எண்ணத்துடன் நாளைத் துவக்கி நகர்த்த வேண்டும். இந்தக் கவிதையைப் படித்ததுமே புத்துணர்வு பிறக்கிறது ப்ரியா! திரும்பத் திரும்பப் படித்து மனதில் பதித்துக் கொள்ளும் வண்ணம் அழகான கவிதை தந்த உங்களுக்கு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சார... தங்கள் கருத்தை காணவில்லையென்ற வருத்தம் இருந்தது தீர்ந்தது.. :)

   நீக்கு