பக்கங்கள்

சிதறல் - 20

விட்டுவிடுங்கள்
---------------------------

பிரித்துவிடாதீர்கள்
விடியும் வரை
அந்த இமைகளை - அதனுள்
பத்திரமாய் இருக்கிறது
இருதுளிக் கண்ணீர்....                                                                         ----x----
 
வேறுபாடு
----------------

அடக்கிய கண்ணீர்
அழுத்தத்தின் குறியீடு
உருண்டோடும் கண்ணீர்
கட்டடங்கா நேசம்....

உருண்டோடும் கண்ணீருக்கு
அணைபோட நினைக்கிறேன்
எப்படியும் முடியவில்லை
இன்றைய பொழுதுகளில்...

                                                                         ----x----

நிச்சயமாய்
------------------

நிறங்களின் நாட்களில்
கறுப்பு வெள்ளையாய்
நகர நினைப்பது
சற்றே கடினம்தான்!

                                                                         ----x----

இருத்தல்
---------------

ஏதோ ஒன்றாய்
ஏதோ ஒன்றில்
எப்பொழுதும் இருப்பதும்
இருத்தல்தான்!
--பிரியா 


5 கருத்துகள்:

 1. விட்டு விடுங்கள், இருத்தல் ரெண்டும் மத்த எல்லாத்தயும் விட மனசுல பச்சக்னு ஒட்டிக்கிச்சு ப்ரியா.

  பதிலளிநீக்கு
 2. முதல் கவிதை ரொம்பப் பிடிச்சிருக்கு...
  மற்றையவை அருமை.

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் தங்கையே !

  இருத்தல் இன்னும் இருக்கிறது இதயத்தில் விலகாமல்
  அருமை அருமை தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு