பக்கங்கள்

சாதியின் பெயரால் இன்னுமொரு மரணம்...
இன்னும் எத்தனை பேரை சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் காவு  குடுக்க போகிறோம்.. இன்னும் எத்தனை பெரியார்கள் வேண்டும் நம்மை திருத்துவதற்கு.. மனம் துடிக்கிறது


"நெஞ்சு பொறுக்கு திலையே! - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
நெஞ்சு பொறுக்கு திலையே! "


ஐந்தறிவு கொண்ட விலங்குகளையும் விட கேவலமாய் போனான் ஆறறிவு கொண்ட மனிதன். வாழ தெரியாதவர்களாய் இருந்து கொண்டு வாழ்பவர்களையும்  என் சாகடிக்க துடிக்கிறீர்கள்.


இன்னும் என்னேனா செய்ய  காத்திருக்கிறீர்கள் வீணாய்  போன சாதியையும் மதத்தையும்  கட்டிக் கொண்டு... அனைவரையும்  கொன்றழித்து விட்டு  பேய்களுடனும் பிணங்களுடனும்  சென்று நடத்துங்கள் உங்கள் சாதிகளுக்கான பேரணியை.. மனிதர்களே இல்லாத பூமியோன்று சுடுகாடாய் உங்களுக்காய் காத்திருக்கும் சாதி வெறியர்களே அதில் கூத்தடித்து கும்மாளமிடுங்கள்... உங்கள் குடும்பம் குழந்தைகளின் ஆவிகளும் அந்த சோதியில் கலந்து ஆடட்டும். சாதியின் பெயரால் நீங்கள் வைத்த கொல்லி உங்கள் வீட்டு கூரைகளையே தின்று பசி ஆரட்டும்.அழிந்து போகட்டும் சாதியின் பெயரால் நீங்கள் கட்டமைத்த சமூகம்...


--- பிரியா

6 கருத்துகள்:

 1. சாதி வெறி பிடித்த தமிழ் சமூகத்தின் மற்றுமொரு துன்பியல் வடு, மனம் நோகின்றது. ஏண்டா இப்படி சாதி வெறிப் பிடித்த வாழ வேண்டியவர்களின் வாழ்வை சீரழிக்கின்றனரே !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழகம் தன பயணத்தை பின் நோக்கி நடத்த துவங்கி உள்ளதின்அடையாளம் இது.. விரைவில் உணர்ந்து திருந்த வேண்டிய தருணம்...

   நீக்கு
 2. உண்மையிலே செய்திகளின் பார்க்க,வாசிக்க மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கு. இனிமேலாவது திருந்துவார்களா. இல்லாவிட்டால் எத்தனை பெரியார் வந்தாலும் இவர்களை திருத்தமுடியாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சமுதாய மாற்றம் என்பது அனைவருமே ஒன்று பட்டு செய்ய வேண்டியதே... இதில் யாரும் யாரையும் எதுவும் சொல்ல இயலாது...

   நீக்கு