எனக்கான காற்று
எனக்கான மழை
எனக்கான நிலம்
எனக்கான வாழ்க்கை
எனக்கான என்னுடையவைகள்
இவைகளை மட்டுமே - நான்
இந்த நதி
இந்த தனிமை
இந்த கடல்
இது எனக்கானது
இங்கே நான்
நானாயிருக்க நினைக்கிறேன்
இதிலென்ன தவறு?
உங்கள் நிலத்தில்
உங்கள் காற்றில்
உங்கள் வானில்
நான் எதையும் பங்கிடவில்லை
எனக்கான சுவாசத்தின்
கடவு சீட்டும்
உங்கள் வசம் என்றால் - இங்கு
எனக்கான வாழ்வென்பதேது?
நான் விடுவிப்பது
என்னுடைய சங்கிலிகளை
இந்த திறவுகோல் என்
விலங்கினை அவிழ்க்க
இதில் நீங்கள் யார்
எனைத் தடுக்க?.........
என்னுடையதை நான்
எனதென்னும்போது
முத்திரை இடுகிறீர்
பெண்ணியவாதியென்று
பெண்ணாதிக்கமென்று
பரவாயில்லை
இருந்துவிட்டு போகட்டும்
வியாதி பிடித்த உங்கள்
மனதினில் இருந்து
விடுவித்து காத்துக்கொள்ள
எனக்கு வாதி பட்டம்
--பிரியா
// வியாதி பிடித்த உங்கள் மனதினில் இருந்து... //
பதிலளிநீக்குசரியாகச் சொன்னீர்கள்...
நன்றி அண்ணா....
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குகவியை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்
நீக்குஅருமையான கவிதை! வியாதி பிடித்த மனதில் எல்லாம் தவறாகத்தான் தோன்றும்!
பதிலளிநீக்குநன்றி சுரேஷ் சார்
நீக்கு