பக்கங்கள்

சிதறல் - 13

பயணங்கள்
-----------------
தனிமையுடன் கூடிய
நெடுந்தூரப் பயணங்கள்
முற்றுப்பெறுகின்றன
சிறந்ததொரு பொழுதில்
எனக்கான அறையின்
இறுதித் தனிமையில்நொடிப்பிறப்பில்
-----------------------
என்னுள்ளான என்னுடன்
பேசக் காத்திருக்கும்
புத்தகங்களுடனும்

என் எண்ணங்களை
வெளிக் கொணரும்
கவிதைகளுடனும்.....

வாழ்க்கை ஆரவாரமாய்
பிறக்கின்ற ஒவ்வொரு
நொடிதனிலும்தொலைந்து போகிறது
-------------------------------
மண்டியிட்ட முழந்தால்களின்
தெரிக்கின்ற வலிதாண்டியும்
அந்நிலையிலேயே நமைவைக்கும்
தேவைகளைக் குறித்த
புரிதலுக்கான தேடலுடன்
தொலைந்து போகிறது.....
முழந்தாலினின்று நிலைமாறும்
எண்ணங்கள் அத்தனையும்.....


ஒரு புரிதலில்
-------------------
நேற்றிலிருந்தும் நாளைக்காகவும்
தொடரும் நாட்களில்
குழப்பங்கள் ஏதுமில்லை
நகர்தலின் அர்த்தம்
புரிந்து போனதில்

--பிரியா 

8 கருத்துகள்:

 1. அருமை... நகர்தலின் அர்த்தம் புரிந்து போனதில் மகிழ்ச்சி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மொத்த நகர்தலுக்கும் அர்த்தம் புரிவது கடினம் தான்... இது ஒரு சிறு பாதையின் அர்த்தம் புரிந்த்ததுக்கான மகிழ்ச்சி சகோ.... :)

   நீக்கு
 2. வணக்கம்

  சின்னச்சின்ன தலைப்பில் சிந்திய கவி கண்டு மகிழ்ந்தேன்
  நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. சிறப்பான குறுங்கவிதைகள்! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு