பக்கங்கள்

நூற்பவள்....


வனங்களின் பூக்களில்
வசந்தமெனும் நூற்கொண்டு
தனிமை சொகுசில்
சேலை நூற்கிறாள்
அங்கு ஒருத்தி!

வண்ணங்கள் எத்தனை?
வரிகள் எத்தனை?
வடிவம்தான் என்ன?
கவலையேதும் இல்லை
நூற்பவள் அவளுக்கு

எண்ணங்களின் இழைகளில்
மனதின் வண்ணத்தில்
கைபோகும் வடிவினில்
நூற்கிறாள் அவள்
முடிவில் இதோ
அவள் கைவண்ணம்

வானவில்லை தோற்கடித்தது
வர்ணங்களின் ஜாலத்தில்
நிலவும் தோற்றது
ஆடையின் வனப்பில்
ஆ! எப்படிதான் சொல்ல
ஜொலிக்கும் பேரழகினை
இயற்கையின் ரகசியத்தை

தனிமை சொகுசின்
எண்ண உல்லாசம்
இனிமை போடும்
அழகிய கோலம்--பிரியா

2 கருத்துகள்: