பக்கங்கள்

இலையைப்போல....

ஒற்றைக் காலில்
சுற்றி சுழன்று
ஆடிக் கொண்டிருக்கும்
அந்த இலையின்
நடனத்தில் இலயித்திருக்கிறேன்....

தன்  தாளங்கள் பற்றிய கவலையில்லை
தன் அசைவுகள் குறித்து பிரங்ஞையில்லை
எவர் பார்ப்பார், எவர் என்ன சொல்லுவார்
எதுவுமே இல்லை
அந்த இலைக்கு....

காற்றுடன் கைகோர்த்து
தானாக கோர்த்த தாளத்தில்
தடம் பிடித்து செல்கிறது
இயல்பு மாறாமல்...

வாழ்ந்திட வேண்டும்
ஒரு நாளாகினும்
அந்த இலையைப்போல.....

--பிரியா 

3 கருத்துகள்:

 1. வாழ்த்துக்கள்! உங்களது இந்த கவிதையை தேன் சிட்டு மின்னிதழில் பிரசுரித்துக்கொள்ள அனுமதி வேண்டுகிறேன்! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோ... தாங்கள் தாராளமாய் பிரசுரிக்கலாம்... அப்படியே எனக்கும் அதன் லிங்க் அனுப்பிவிடுங்கள்

   நீக்கு
  2. நன்றி சகோ! உங்கள் மின்னஞ்சல் முகவரி அல்லது வாட்சப் நம்பர் 9444091441 என்ற எண்ணுக்கு அனுப்பி வையுங்கள். தேன்சிட்டு மின்னிதழ் அனுப்பி வைக்கிறேன். நன்றி!

   நீக்கு