பக்கங்கள்

சிதறல் - 18

பூக்கள்
======
பச்சைப் புல்வெளியில்
சிதறிக் கிடக்கின்றன
பூக்கள் - என் மனதின்
எண்ணங்களைப் போலவே
எத்தனை முயற்சித்தும்
முடியவே இல்லை
ஒரு நிலைப்படுத்த....


----x----

நிலா
=====
சற்றே இடம்பெயர்ந்திருக்கிறது
தூரத்து கோபுரத்தின் உச்சியில்
நான் நிதமும் பார்க்கும்
நிலா.........

----x----


பாலையின் காற்று
=================

பாலைவனப் பாதையில்
பயணிக்கும் தருணத்தில்
மணலுடன் சேர்த்து
அலைக்கழிக்கப்படுகின்றன
எத்தனையோ எண்ணங்கள்.........

----x----


எனதருமைத்  தோழியே
=========== =========

நீ இல்லாத
இத்தருணங்களை
உன் நினைவுகளுடனே
நகர்த்திச் செல்கின்றேன் - என்
மழைத் தோழியே!-பிரியா 

6 கருத்துகள்:

  1. அருமையான சிந்தனைகள் தொடர வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  2. சிதறல்கள் அருமை ப்ரியா !

    தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு