பக்கங்கள்

சிதறல் - 10


கணப்பொழுதுகள்
-------------------------

அலைகளின்
ஒலியின் வழியே
நீந்திச் செல்கிறது - வாழ்க்கை
சில பயணங்களில்


                          ----X----


நானாகிய....
--------------

அனைவரையும் காட்டும்
முகவரிக் குறிப்பேட்டில்
தேடித்தேடி சலிக்கிறேன்
தொலைத்துவிட்ட
என்னை


                          ----X----


யாதுமாகி

-----------------

ஏதுமற்ற நாட்களில்
எல்லாமுமாய் ஆகிறது
பல நேரங்களில்
உன் நினைவுகள்

                          ----X----


வழிகாட்டி
--------------

சகுனங்கள் ஏதுமற்ற
இருட்டின்
காலடித்தடத்தின் வழியே
அழைத்துச் செல்கிறது
நம்பிக்கையின் ஒளிக்கீற்று-- பிரியா 

10 கருத்துகள்:

 1. ஹய்யோ... நாலுல எது பெஸ்ட்னு சொல்லிப் பாராட்டலாம்னா... நாலும் முத்தா இருக்குதே தங்கச்சி... நான் என்ன பண்ணட்டும் அதனால இந்தத் தடவை உனக்கு பாராட்டெல்லாம் கிடையாது போம்மா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா அண்ணா இதை விட பெரிய பாராட்டென்று ஒன்று இருக்க முடியுமா....

   நீக்கு
 2. ஒளிக்கீற்றும், சில பயணங்களும் மிகவும் ரசித்தேன்...

  பதிலளிநீக்கு
 3. அனைத்தும் நன்றே! இருந்தும் இரண்டாவது பிடித்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிகக் நன்றி இனியா.... இரசனைகள் வித்தியாசப் படத்தானே செய்யும்... :)

   நீக்கு
 4. குறுங்கவிதைகள் அனைத்தும் சிறப்பு! பிடியுங்கள் வாழ்த்து! நன்றி!

  பதிலளிநீக்கு
 5. அனைத்தும் அருமை ....
  யாதுமாகிறேன் நானும் ப்ரியா

  வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
  4

  பதிலளிநீக்கு