பக்கங்கள்

ஏதாகிலும் ஒன்றை....இன்று ஏதாகிலும் ஒன்றை எழுத வேண்டும்
இதோ எடுத்தாயிற்று காகிதமும் எழுதுகோலும்....

ஆனால் எதை எழுத? எப்படி எழுத?
எங்கு தேடியும் சொற்கள் இல்லையே!

சொல்லாத வார்த்தை
உணராத மௌனம்
ஒற்றையடிப் பாதை
யாருமற்ற குளக்கரை
வெற்றியின் மகிழ்ச்சி
குழந்தையின் சிரிப்பு

இவற்றில் எதைத்தான் எழுத
ஆ! இன்று ஏன் இத்தனை ஆயாசம்

தீட்டப்படாத ஓவியம்
உயிர்ப்படையா வாக்கியம்
நிறைவேறா காதல்
முற்றம் அடையா தூறல்

இதுபோல் இன்று
இதுவும் ஒன்று.....--பிரியா

7 கருத்துகள்:

 1. சொல்லவில்லை இல்லையென்று
  சொன்னதெல்லாம் உள்ளதென்று
  சொல்லிவிடு இன்னும்கொஞ்சம்
  சொல்லில் தெரியுதுசொல்வாயென்று...

  வாழ்த்துக்கள் தோழி!

  பதிலளிநீக்கு
 2. கவிதை எழுதணும்னு ஆசைப்பட்டு உக்காந்தா எனக்கு ஏற்படற அதே எண்ணங்கள்... அவஸ்தைகள் இந்தக் கவிதைக்கு நூறு சதம் பொருந்துது. வெகு அருமை! (நான் ரெண்டு தடவை கவிதை எழுதினேன். ஜனங்க கதறி அழுதாங்களேன்னு அப்புறம் விட்டுட்டேன் அந்த முயற்சியை. ஹி... ஹி...)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா... எழுத எழுத எல்லாம் வந்துருமே.. உங்களுக்கு சொல்லனுமா என்ன... வாழ்த்துக்கு நன்றி சார்...

   நீக்கு
 3. ஏதோ ஒன்றை எழுதும்வரை
  எதுவும் தெரிவதில்லை
  எழுதத் தொடங்கிவிட்டால்
  நடக்கப் பழகிய குழந்தையாய்
  தத்தித் தத்தி வார்த்தைகள் வந்தாலும்
  அதுவும் அழகுதான் ப்ரியா
  சொந்தமாய் எழுதுவதால்

  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு