பக்கங்கள்

நான் நானாகவே....
உன் நிராகரிப்பின்
எச்சங்களின் வழி
தொடர்கிறது என்
வாழ்க்கையின் பயணம்

வரங்களாய் மாறிய
நின் சாபங்களுடனும்
வழியை மறைத்த
நின் நினைவுகளுடனும்

என்இறுதி  பயணத்தின்
கடைசி ஸ்பரிசமும்
சொல்லிச்  செல்லும்
நான் நானென்பதை

என்மீது விழும்
கடைசி மலரிலும்
ஒழிந்து கொண்டிருக்கும்
எனக்கான வாசம்

எது எப்படியாகினும்
நான் மாறாமலே...
காலம் ஒத்துழைத்தால்
கொஞ்சம் பார்த்துச்செல்

என்னை பற்றி
எரியும் நெருப்பும்
தனக்கான பாதையை
தானாய் வகுப்பதை

-- பிரியா 

4 கருத்துகள்:

 1. /// எது எப்படியாகினும்
  நான் மாறாமலே... ///

  அருமை...

  தொடர வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. நீ நீயாகவே இரு
  நிலையாமைகள் உன்
  நினைவுகளை அரியும் போதும்
  நிலைதடுமாறாமலே இரு
  நித்தியம் என்பது
  நீரெழுத்தல்ல ...
  நீ தேடும் சத்திய வானம்....!

  அழகிய உணர்வுகள் பிரியா
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு