பக்கங்கள்

எனது முதல் பதிவின் சந்தோசம் தொடர்கிறது (தொடர் பதிவு)


தோழி தமிழ் முகில்  பிரகாசம் - முகிலின் பக்கங்கள் தளம் அவர்களின் அழைப்பிற்கு இணங்க " எனது முதல் பதிவின் சந்தோசம் என்ற தொடர் பதிவினை இங்கே பதிகிறேன்...!


ஆரம்பத்தில் சிறு கிறுக்கல்களாய்   கவிதை எழுத தொடங்கி முக நூலில் நண்பர்களிடம் மட்டுமே அதை பகிர்ந்தும் வந்தேன்... ஒரு முறை முகநூல் தோழியுடன் இணைந்து இயல்பாகப் பேசிக் கொண்டிருக்கையில் கவிதைககளைப் பதிய ஒரு க்ரூப் ( குழு ) தொடங்கலாம் என்று பேசி உடன் அதை செயல்முறையிலும் கொண்டு வந்தோம்...அவ்வாறு ஆரம்பிக்கப் பட்டதுதான் " கவிதையைத் தேடி கவிஞனைத் தேடி" என்ற குழுமம்..அதில்தான் என்னுடைய முதல் பதிவும்..

தோழிக்கு ஆங்கிலத்தில் நல்ல கவிதை வளம் உண்டு...நானும்  தமிழில் ஓரளவிற்கு எழுதுவேன் என்பதால் ஏதோ  ஒரு நம்பிக்கையில் இருவரும் அதில் பதிய தொடங்கினோம்.அத்துடன் கவிதை எழுதும் பிற நண்பர்களையும் எங்களுடன் இணைத்துக் கொண்டோம். அதில் என்னுடய பதிவிர்க்கு பல நண்பர்களின் ஆதரவும் வரவேற்பும் கிடைத்தது. முதல் முறையாக என் எழுத்திற்கு வெளி உலகின் அங்கீகாரம்.அதில் மகேஷ், ஆதி, பபிதா அக்கா, சீராளன் அண்ணா போன்ற பல நண்பர்களின் ஆதரவும் ஊக்கமும் இன்று வரை எழுத துணையாக இருக்கிறது.  என் கவிதைகள்  அனைத்தையும் முதலில் மகேஷிடம் காட்டிக் கருத்துக் கேட்ட பின்னரே வெளியிடும் வழக்கம் இன்று வரை.அவ்வகையில் மகேஷ் இன்று வரை என் அனைத்து கவிதைகளின் முதல் வாசகராக உள்ளார். அந்த குழுமத்தின் வழியாகவே சிறந்த கவிதை நடையை தன் வசம் கொண்டிருக்கும்  சீரளன் அண்ணா (என்னுயிரே வலைப் பூ) அவருடைய நல்ல நட்பும் வழிகாட்டுதலும் கிடைத்தது. (அறிமுகம் முன்னரே உண்டு...)

ஊக்கத்தின் காரணமாக அதன்  பின்பு ஒரு நாள் கவிதைகளை முகநூலுடன் விட்டு விடாமல் அவைகளை எப்போதிற்குமாய் பாதுகாத்து வைக்கும் எண்ணத்துடன் ஒரு ப்ளாக் (வலைப் பூ)தொடங்க வேண்டுமென்று எண்ணி, அதன் காரணமாக இந்த வலைப் பூவை தொடங்கினேன். ஆரம்ப கடடத்தில் Blogger புரியாத புதிராகவே இருந்ததால் இதை விட்டு WEBNODEல்  இதே மழைச்சாரல் என்ற பெயரில் வலைப் பூவை உருவாக்கி நீண்ட நாட்களுக்கு அதனையே உபயோகப்படுத்தி வந்தேன். சின்ன சின்னதாயும் அவ்வளவாய் என் கவிதைகள் வடிவம் பெறாத நாட்களிளும் நான் எழுதிய அனைத்து கவிதைகளும் இன்றளவிலும் அங்கு உண்டு.

அதன் பிறகு அதில் உள்ள சில பயன்பாட்டு குறைகள் காரணமாக மீண்டும் சீராளன்அண்ணாவின் வழிகாட்டுதலுடன்  இங்கேயே. தமிழ் மணத்தில் என் வலைப்பூவை இணைத்ததும் ஆரம்ப காலம் முதல் அதன் மூலம் பால கணேஷ் சார்   (மின்னல் வரிகள்) திண்டுக்கல் தனபாலன் சார்                         (திண்டுக்கல் தனபாலன்) இவர்களின் ஊக்கம் மற்றும் அறிவுரைகளும் சேர்ந்து கிடைத்தது. இன்னும் பலரின் நட்பும் அறிவுரைகளும் கூட.. அவை எல்லாவற்றையும் என்னால் முடிந்த வரை சரியாகப் பயன்படுத்தி வலைப் பூவிலும்  என் கவிதை நடையிலும் நிறைய நல்ல மாற்றங்களை கொண்டு வர தொடர்ந்து முயற்சி செய்கிறேன். இன்று தமிழ் மணம் மூலம் கிடைத்த இன்னும் நிறைய நண்பர்களின் ஊக்குவிப்புடனும் என்னுடைய இன்னும் மாறாத அதே சந்தோசத்துடனும் என் பயணம் இனிதே தொடர்கிறது ஒவ்வொரு புதிய பதிவிலும்...

தமிழ் முகில்  தோழிக்கு நன்றிகள் என் பழைய நினைவுகளை மீட்ட உதவியமைக்கு.. :)


-- பிரியா 

18 கருத்துகள்:

 1. அழகிய நினைவுகள் மீட்டி
  அடுக்கிய வார்த்தைகளில்
  மெழுகதுவாய் உருகும்
  மெய் நன்றி கண்டேன்
  கவிமணம் கமழ
  காலமெல்லாம் புகழ் சேர்ந்து
  இன்புற்று இன்னும் வளர
  இதயத்தின் வாழ்த்துக்கள்..!

  அருமை ப்ரியா
  வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி அண்ணா... நான் பதிவில் சொல்லியதை உண்மையென உறுதியுடன் உரைக்கிறது உங்கள் கருத்து... :)

   நீக்கு
 2. எனது அழைப்பினை ஏற்று தங்களது இனிமையான அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கும் என் முதல் நன்றிகள்... என் நினைவுகளை மீட்ட உதவியமைக்கு :)

   நீக்கு
 3. தங்களின் முதல் பதிவிற்கு உதவிய நல்லுலங்களுக்கு பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஐய்யா... தங்களின் ஊக்குவிப்பும் இதில் அடங்கும்...

   நீக்கு
 4. நினைவுகளின் பகிர்வு அருமை வாழ்த்துக்கள் சகோதரி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நாகா சார்... முக நூலில் தொடங்கி இங்கு வரை எனக்கு அளிக்கும் ஆதரவிர்க்கும்...

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களுக்கும் என் நன்றிகள் தனபாலன் சார்... என்றைக்கும் இதே ஆதரவை எதிர் நோக்கி.... :)

   நீக்கு
 6. அன்போடு ஆதரித்து உதவியவர்களையும் ஊக்குவித்தவர்களையும் என்றும் மறவாமல் இருக்கும் உங்களுக்கு பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர்களின்றி நான் இங்கு இல்லையே... பின் எப்படி மறக்க முடியும் சகோ...

   நீக்கு
 7. உங்கள் முதற் பதிவின் சந்தோஷம் முத்தாய் மிளிர்ந்தது.
  ஊக்குவித்தவர்களை நினைவு கொண்டதும் மிகச் சிறப்பு.
  அருமை. வாழ்த்துக்கள்!

  த ம.2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி தோழி வாழ்த்துக்கும், வாக்குக்கும் ... :)

   நீக்கு
 8. ஒரு சிறந்த ரசிகன் தன்னை படைப்பாளியாக்கிக் கொள்கிறான்!! தங்கள் படைப்புகள் உச்சம் தொட வாழ்த்துக்கள் ப்ரியா !
  http://priya-s.webnode.com// இந்த தளத்தின் முகப்பில் உள்ள எழுத்துக்கள் மிக பிரமாதம் ! //பழமைக்கும் புதுமைக்கும் இடையே சிக்குண்டு எப்பக்கமும் முழுமையாய் சாயாமல் எண்ணச் சிக்கல்களில் நான் எழுதிய வரிகள் இங்கே.... //
  :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி விஜயன்.. தங்கள் வாழ்துக்களுக்கு.. அந்த தளத்தில் இருக்கும் அதே வார்தைகளைத் தான் இங்கேயும் என்னை அறிமுகப்படுத்த உபயோகித்துள்ளேன் என்னைப் பற்றியில்... :)

   நீக்கு