பக்கங்கள்

சிதறல் - 2

காதல்
-----------

நீயும் நானும்
நானும் நீயும்
அவ்வளவே காதல்மழையும் காதலும்
-------------------------------

நனைந்து கொண்டே நிற்கிறேன்
மழை பிடிப்பதாலா? - இல்லை
மழையின் வழியே கசியும்
உன் காதல் பிடிப்பதால்.சிரிப்பு
-----------
தூரிகைகள் சமைத்து செய்த
அழகிய வண்ண ஓவியம்
மழலையின் சிரிப்பு
நட்பு
---------

பாம்பன்பாலமோ
பாபிலோன் பாலமோ
தேவையில்லை
நட்பு பாலமே போதும்
இரு இதயங்கள் இணைய...

-- பிரியா

6 கருத்துகள்:

 1. சிதறிட்ட தேந்துளிகள்
  சுவறியதே என்மனதில்...

  இனிய வாழ்த்துக்கள் தோழி!

  பதிலளிநீக்கு
 2. ஒவ்வொன்றும் இனிமை. அதிலும் இரண்டாவது எனக்கு மிகவும் பிடித்தது ப்ரியா! மழலை என்பதை மழழை என்று கொஞ்ச்ச்சம் அழுத்தமாக உச்சரித்திருப்பது படிக்கவே வலிக்கிறதே...! மாத்திடுங்க ப்ளீஸ்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அச்சோ சாரி கவனிக்கல... மாத்திட்டேன் இப்போ... நன்றி சார்.. சொன்னதுக்கு

   நீக்கு