பக்கங்கள்

சிதறல் - 4



நினைவுகளினூடே
------------------------

யாருமற்ற 
கணங்களின் யோசிப்பில்
ஏதோ ஒன்றின் 
ஆரம்பப் புள்ளியாய்
சில நினைவுகள்





                                                           ***********************



நிலவு
----------

நினைவுப் பாதையில் 
பல பொழுதுகளை
மீள்பதிவு  செய்கிறது
ஒளிசிந்தும் இந்த
நிலவின் தரிசனம்



                                                         ***********************



சில தேடல்கள்...
-----------------------

முடிவுகளற்ற 
ஏதோ ஒன்றின் 
முடிவைத் தேடியே
நீள்கின்றன
சில பயணங்கள்


                                                            *******************



இரவின் துணை..
-----------------------

பகலைத் தேடும்
இரவின் தனிமையில்
சின்னதாய் வெளிச்சம்
ஜன்னலின் அருகில்
மின்னாம் பூச்சிகள்...



                                                 *******************************


தள அறிமுகம்...
----------------------------

முதல் முறையாக என் வலைப் பூவில் செய்கின்ற  தள அறிமுகம் இது... நான் இங்கே அறிமுகம் செய்வது நிரோஷன் அவர்களின் வலைப்பூ "நெய்தல்" ...

தளம் முழுவதும் குட்டி குட்டிக் கவிதைகளால் நிரம்பி உள்ளது,...நாம் எதிர் பார்க்காத பல விடயங்களை எதிர் பார்க்காத கோணத்தில் சொல்லியிருப்பது சிறப்பு... மிகவும் எளிமையாக பல பெரிய கருத்துகளைச் சொல்லி அட போட வைக்கிறார். மிக சிறந்த உதாரனம் இந்தக் கவிதை

அநியாய நிசப்தம்


பொத்தானை அழுத்தியதும்...
தொற்றிக்கொள்கிறது,
செயற்கை மௌனம்!

இயந்திரம் மட்டும் பேசுகிறது.

பேய் பிடித்திருக்கிறது போலும்
மின்தூக்கிகளை!


lift என்னும் மின்தூக்கியினுல் மனிதர்களைக் குறித்து...


அவரது சில படைப்புகளில் கருத்து வேறுபாடுகள் இருப்பினும், வளம் பெறக் கூடிய எழுத்துக்கள் என்ற நோக்கில் உங்களுக்கும் அறிமுகம் செய்கிறேன்...
நீங்களும் சென்று படித்து மகிழுங்கள்....

http://karaiyorakaatru.blogspot.in/2013_09_01_archive.html



--பிரியா

10 கருத்துகள்:

  1. முடிவுகளற்ற ஏதோ ஒன்றின் முடிவைத்தேடியே நீள்கின்றன சில பயணங்கள்...///
    மிக அருமையான உணர்வுக்கவிதை...
    எல்லாக்கவிதைகளுமே குட்டியாய் அழகாய் உணர்வாய் மனதைத்தொட்டுச்சென்றன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சாய்ரோஸ் தங்கள் வருகைக்கு... தொடர்ந்து வந்து ஊக்கம் தாருங்கள்... :)

      நீக்கு
  2. உங்கள் வரிகளை படித்துவிட்டு நிலவின் மீள்பதிவைப்பற்றி கருத்திட விளைந்தால், என் தளத்தை அறிமுகம் செய்திருக்கிறீர்கள். முதலில் உங்கள் வரிகளுக்கான பாராட்டுக்கள்.

    அப்புறம் - இதயம் நிறைந்த நன்றிகள்.

    எத்தனை அழகாக நிலவு நேரம் இருந்தாலும், நிகழ் காலத்தை ரசிப்பதை விட்டு விட்டு இறந்தகாலத்துக்கு மனதை கூட்டிச் சென்றுவிடுகிறது நிலவொளி! அதற்கும் பேய் பிடித்திருக்குமோ?
    - நிரோஷன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நிரோஷன்... சில நாட்களாகவே தங்கள் தளத்தை அறிமுகப் படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தது... சரியான தருணத்திர்காய் காத்திருந்தேன்... இன்று உங்களைப் போலவே குட்டிக் கவிதைகளை நானும் பதிவு செய்ததால் இதனுடன் இணைத்து அறிமுகமும் அளித்துவிட்டேன்... :)

      நீக்கு
  3. நினைவுப் பாதையில் பலபொழுதுகளில் மின் பதிவு செய்கிறது ஒளிசிந்தும் இந்த நிலவின் தரிசனம் அட டா அருமை அழகான வரிகள்

    பதிலளிநீக்கு
  4. அழகிய சிதறல்கள் அத்தனையும் அருமை

    வாழ்த்துக்கள் ப்ரியா

    பதிலளிநீக்கு
  5. சென்ற வாரம் எனது ரசனையின் டாப் வரிசையில் இடம் பிடித்த இந்தக்கவிதைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
    http://jeevanathigal.blogspot.com/2013/09/02-to-08-09-2013.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனமார்ந்த நன்றிகள் அறிமுகத்திர்க்கும்... வாழ்த்துக்கும்.. :)

      நீக்கு