பக்கங்கள்

கடலும் கிழவனும் (மொழிபெயர்ப்பு நூல்)

அறிமுகம்:

எழுத்துக்கள் அனைத்திற்க்கும் ஆதாரமாய் இருப்பது நல்ல வாசிப்புத் தன்மையே.அந்த அளவில் நான் வாசித்த என்னை மிகவும் கவர்ந்த சில புத்தகங்களையும் எழுத்தாளர்களையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும் முயற்ச்சியாக புத்தக அறிமுகம் என்ற புதிய பகுதியை இன்று முதல் தொடங்குகிறேன். இதில் முதல் நூலாக எர்னெஸ்ட் ஹெமிங்க்வே என்ற ஆங்கில எழுத்தாளரின் The old man and The sea தமிழில் கடலும் கிழவனும் என்ற சிறு நாவலை இங்கே பகிற்கிறேன்.


நூலைப் பற்றி:

எழுதியவர் : எர்னெஸ்ட் ஹெமிங்க்வே (Ernest Hemingway)
மொழி : ஆங்கிலம்
Title in English : The old man and The sea
தமிழில் : கடலும் கிழவனும்
மொழிபெயர்தவர்: ச.து.சு. யோகியார்
வெளியீடு : சந்தியா பதிப்பகம்
பக்கங்கள்: 80
விலை : ரூ . 30
இந்த நாவல் 1952ம் ஆண்டில் புலிட்சர் பரிசையும் 1953ல் நோபல் பரிசையும் வென்றுள்ளது.



கதை

இந்த நாவல் கடலில் மீன் பிடிக்க செல்லும் ஒரு செம்படவ முதியவரின் வாழ்க்கையில் 4 நாட்கள் கடலிலும் நிலத்திலும் சேர்ந்து நடக்கும் நிகழ்ச்சிகளின் தொகுப்பு.

அவருக்கு உதவியாகவும் மீன் பிடித் தொழிலைக் கற்றுக் கொள்ளும் வகையிலும்  ஒரு சிறுவன் அவனுடய 5ஆவது வயதில் அவரிடம் அவன் பெற்றோர்களால் வேலைக்கு சேர்த்துவிடப் படுகிறான்.பல காலமாய் அவன் முதியவருடன் கடலுக்கு சென்று வருகிறான். இப்பொழுது அவன் ஒரு வளர்ந்த பையனாகி விட்டான். இவ்வளவு காலத்தில் இருவருக்குள்ளும் நல்ல அன்பு உருவாகி வளர்ந்துள்ளது.

கடந்த 80 நாட்க்களாக அந்த முதியவருக்கு கடலில் எதுவும் கிடைப்பதில்லை. அவருடைய அதிர்ஷ்டம் எல்லாம் தீர்ந்ததாகக் கூறி பையனின் பெற்றோர் அவனை வேறொரு படகில் சேர்த்து விடுகின்றனர். ஆனால் பையனுக்கு முதியவரின் மேல் அதீத அன்பு, அவரை விட்டுப் பிரியவும் மனமின்றி பெற்றொர் சொல்லையும் மீற இயலாமல், வேறொரு படகில் சேருகிறான். இருப்பினும் கடலுக்கு சென்று வந்த பிறகும் செல்வதற்க்கு முன்னும் அவருக்கு உணவு வாங்கி வருவது, வலைகளை படகுக்கு எடுத்து செல்வது  உட்பட நிறைய பணிவிடைகள் செய்கிறான்.

அன்று விடிந்தால் 85வது நாள். முந்தைய இரவு, சிறுவன் முதியவரை சந்தித்துப் பேசுகிறான், மறு நாளைக்குறிய தன்னுடைய கடல் பயணம் குறித்து யோசனையில் முதியவர் இருக்கிறார். சிறுவன் அவருக்கு ஏதேனும் உதவி செய்ய நினைக்கிறான், தானும் அவருடன் மறுநாள் கடலுக்கு வருவதாக சொல்கிறான் முதியவர் அதனை மறுக்கிறார். முதியவரிடம் தூண்டிளுக்கான மீன்களை மட்டுமாகிலும் வாங்கி வருவதாகச் சொல்லி வெளியே செல்கிறான்.மறு நாள் மீன் பிடிக்க செல்வதற்காக சர்டினெ மற்றும் தூண்டில் முள் மீன்களையும் முதியவருக்கும் தனக்குமான இரவு உணவையும் வாங்கி வந்துதந்து விட்டு உணவிற்க்குப் பின் தன் வீட்டிற்க்குச் செல்கிறான்.

முதியவரும் அடுத்த நாள் அதீத நம்பிக்கையுடன் கடலில் தனியாக செல்கிறார். முதல் நாள் கடலில் அவருக்கு எதுவும் கிடைக்கவில்லை, இருப்பினும் நம்பிக்கையுடன் கடலில் நீண்ட தூரம் செல்கிறார். இரண்டாம் நாள் ஒரு பெரிய அதிசய மீனையும் காண்கிறார். அந்த மீன் அவரிடம் அகப்படவும் செய்கிறது. தன் படகை விடவும் நீளமான ஒரு பெரிய மீனை தனியொருவராக பிடிக்கும் முதியவர் அதை எங்கனம் கரையில் கொண்டு சேர்க்கிறார், கரைக்கு மீனைக் கொண்டு வர அவர் படும் கஷ்டங்கள் எவ்வகை இவையே நூலின் முக்கிய மற்றும் இறுதிப் பகுதியாக அமைகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது அவரின் அதிர்ஷ்ட்டம் மீண்டதா இல்லையா, அந்த அற்ப்புத மீன் வசப்பட்டதா இல்லையா என்பதை எழுத்தாளர் மிகவும் பரபரப்புடன் அற்ப்புதமாக கூறி செல்கிறார்.

அந்த பரபரப்பான எழுத்தின் தன்மை நம்மை புத்தகத்தை முடிக்காமல் வேறு எதையும் செய்ய அனுமதிப்பதில்லை. வாழ்விற்க்கான போரட்டத்தை குறித்து அதற்க்குறிய எல்லா விடையங்களுடனும் விவரிக்கிறது இந்த நாவல்.இதுவரையில் இவ்வளவு அற்ப்புதமான ஒரு எழுத்தை வாசித்ததே இல்லை என்று சொல்லும் அளவிற்க்கு உள்ளது இந்த புத்தகம்.ஒரு நூல் பிரபலமாவதற்க்கான முக்கிய விடயங்களாக சொல்லப் படும் பெண் கதாபாத்திரங்கள், காதல் போன்ற எந்த ஒரு வணிக அம்சத்தையும் தன்னகத்தே கொள்ளாமல் மிக சிறந்த எழுத்தை மட்டுமே தன் பலமாக கொண்டு உலக அளவில் பிரபல்யமான நூல் இது. முடிந்தால் அனைவரும் வாசித்து மகிழுங்கள்.


--பிரியா

(எந்த சமுதாயம் அதிக நல்ல நூல்களை வாசிக்கும் பழக்கம் கொண்டிருக்கிறதோ அந்த சமுதாயம் அதே அளவில் நல்ல எழுத்தாளர்களையும் தன்னுள்ளே கொண்டிருக்கும். சிறந்த எதிர்கால தலைமுறையும் அங்கிருந்தே உருவாகும்.)

14 கருத்துகள்:

  1. நல்லதொரு கதை புத்தகத்தை அறிமுகப்ப்படுத்தி இருக்கீங்க. பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  2. நல்லதொரு முயற்சி! இப்படி அறிமுகம் செய்கையில் தவறவிடாமல் நாமும் தேடிப் படிக்க ஏதுவாகின்றது. பொதுவாக நூல்களை வாங்கிப் படிக்கும்போது அவை ஏனோதானோ என இருந்திட்டால் எல்லாம் நட்டமே. ஆனால் இங்கு உங்கள் தயவால் நாமும் சிறந்த நூல்களைத் தேடிப் படித்திடலாம்...

    பகிர்வினுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் தோழி!

    த ம.2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் அப்படி அடிபட்ட அனுபவம் நிறைய.. அதனால்தான் இப்படி ஒரு முயற்ச்சியும் கூட... மிக்க நன்றி தோழி...

      நீக்கு
  3. வணிக அம்சத்தை தன்னகத்தே கொள்ளாமல் மிகச் சிறந்த எழுத்தைமட்டுமே தன் பலமாகக் கொண்டு எழுதப்பட்டு உலக அளவில் பிரபலமான நூல் பற்றிய விமர்சனம் மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
  4. நல்லதொரு கதையாக்கம் ...இந்த புத்தகம் 1958 ஆம் வருடம் படமாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது,இந்த புத்தகம் நோபல் பரிசை வென்றது போல இந்த படம் ஆஸ்காரை வென்றிருக்கிறது...

    பதிலளிநீக்கு
  5. இந்த முகவரியில் இந்த முழு நாவலும் படிக்க கிடைக்கிறது இலவசமாக
    http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=8197

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா மிகவும் நல்லது அனைவருக்கும் பயனுள்ள விடயம்...

      நீக்கு
  6. நல்ல முயற்சி. நல்ல அறிமுகம். நன்றி பிரியா.

    பதிலளிநீக்கு
  7. ­நான் ­இந்­தக் ­க­தை ­பற்றிக் ­கேள்விப்­பட்­ட­துண்­டு. ப­டித்­த­தில்­லை. அ­ழ­கா­க ­வி­வ­ரித்­து, உ­ட­னே ­ப­டிக்­க­ணும்­க­ற ­ஆ­சை­யத் ­தூண்டிட்­டீங்­க ப்ரி­யா...! இ­து­மா­தி­ரி ­நீங்­க ­ர­சிச்­ச ­மத்­த ­புத்­த­கங்­கள்­ பத்­தி­யும் ­அப்­பப் ­ப­கிர்ர்ந்­துக்கங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாய் படியுங்கள் சார்.. அருமையான புத்தகம்... நிச்சயமாய் பகிர்கிறேன்...:)

      நீக்கு