பக்கங்கள்

கூண்டுப் பறவை


"பறப்பது பறவையின் சுதந்திரம்"
பதாகையை
மீண்டும் மீண்டும்
படித்தது
கூண்டிலிருந்த
பறவை ஒன்று


பாவம் பறவை
எத்தனை முறை
படித்தென்ன, பார்த்தென்ன
அர்த்தங்கள்
புரியாத வரையில்


நினைக்காதீர்கள் யாரும்
கூண்டுப் பறவை
கல்வியற்ற
அறிவற்ற
பறவையென்று

என்ன செய்ய
எத்தனையோ
கற்றுத்தந்த  - அதனாசிரியர்

பறத்தலையோ
பறத்தலின் தன்மையையோ
பாவம் பறவைக்கு
பயிற்றுவிக்கவில்லை ஓர்நாளும்

இது அறிந்தும்
அது அறிந்தும்
எண்ணங்கள் ஆயிரம்
எத்தனையோ அறிந்தும்

பறத்தலின் சுதந்திரம்
அறியா பறவைக்கு
அந்தப் பதாகையும்
கூண்டினுள்
வீசப்பட்ட  சாவியும்
என்றுமே ஒன்றுதான்
எதற்கென்று
அறியாத வகையில்


--பிரியா18 கருத்துகள்:

 1. உங்களின் ஆதங்கம் புரிகிறது அந்த சாவியின் நிலைபோல

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த வரிகளின் புரிதல் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதும் கூட இதன் ஆதங்கம் தான்.. நன்றி கவியாழி சார் நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் கருத்தினைப் பார்க்கிறேன்...

   நீக்கு
 2. வணக்கம்
  என்ன வரிகள் கவிதை அருமை வாழ்த்துக்கள்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. // நினைக்காதீர்கள் யாரும்
  கூண்டுப் பறவை
  கல்வியற்ற
  அறிவற்ற
  பறவையென்று ///

  அருமையான வரிகள்... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 4. ஆழமான கருத்து. இன்றைய கல்விகூட கிட்டத்தட்ட கூண்டுக் கிளிகளைத்தான் உருவாக்குகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிஜம்தான் நிரோஷன் ஆனால் சமூக மாற்றங்களுக்கு கல்வி மிகவும் இன்றியமையாத விடயம்...

   நீக்கு
 5. கூண்டுப் பறவைகளாக வாழும் பெண்ணினத்தை மனதிற் கொண்டு
  வடித்த வலிதரும் வார்த்தைகள் இங்கே கவிதையானது அருமை !
  வாழ்த்துக்கள் தோழி இன்பக் கவிதைகளும் இனிதே தொடரட்டும் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோ.... நிச்சயம் முயற்ச்சிக்கிறேன்.... :)

   நீக்கு
 6. முத்தாய்ப்பான வரிகள் சிறப்பு! அருமையான படைப்பு! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 7. கூண்டுப் பறவைகள் அனைத்திற்கும் சுதந்திரம் தேவை என்ற தங்கள் ஆதங்கம் புரிகிறது...

  சிறப்பான கவிதை...

  பாராட்டுக்கள்...

  பதிலளிநீக்கு
 8. மனிதனுக்கும் பறக்கும் திறன் இருந்திருந்தால்
  பறவைகளுக்கான கூண்டுகள் என்றுமே
  தயார் செய்யப் பட்டு இருக்காது

  நல்ல வரிகள் அருமை ப்ரியா
  இனிய வாழ்த்து வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரிதான் அண்ணா... ஆனால் பல நேரங்களில் சுதந்திரத்தை முழுமையாய் அனுபவிப்பவர்கள்தான் அதை மற்றவர்க்கு தடுக்கவும் செய்கின்றனர்...

   நீக்கு
 9. உண்மையில் பறவைகள் திறன் பெற்றவைதான். நிறையப் பறவைகள் தங்களின் திறனை அறியாமலிருப்பது ஒரு வேடிக்கையான நிஜம்! அதேசமயம்... நிறையப் பறவைகளுக்கு சுதந்திரம் மறுக்கப்பட்டு வலுக்கட்டாயமாக கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் நிலை நிலவுவதும் உண்மை1 அத்தகைய கூண்டுப் பறவைகளின் ஆதங்கத்தை உன்னுடைய வார்த்தைகளில் படிக்கையில் மனதை மெல்லிய ஒரு வேதனை கவ்வித்தான் செல்கிறதும்மா...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹ்ம்ம்ம் பல பேரின் வேதனையின் வெளிப்பாடுதான் இந்த வரிகள் அண்ணா... காலம் பாறும் என்ற நம்பிக்கையில்

   நீக்கு