இரண்டு மாதங்களுக்கு முன்பு நான்
ஒரு கேள்வி என்ற பெயரில் பெண்ணிய கவிதை ஒன்றை எழுதி இருந்தேன்... அந்த கவிதைக்கு இங்கே எதிப்புகள் எதுவும் இல்லை என்றாலும் முகநூலில் மிகப் பெரிய அளவில் எதிர்ப்பை சந்தித்தேன்... நான் ஏதோ இல்லாத ஒன்றை கவிதையாய் கர்ப்பனையில் வடித்தது போல.
யாருக்காக யாரை நினைத்து ஏழுதினேனோ அந்தப் பெண் வர்க்கத்தை சார்ந்தவர்களிடமே எதிர்ப்பை சம்பாதித்தது அவர்களுக்கு என் எழுத்தின் உண்மையைப் புரிய வைக்க மிகப் பெரிய பிரம்ம பிரயத்தனம் செய்ய வேண்டி இருந்தது... இதற்க்கும் அக்கவிதையின் மிக முக்கிய கருப்பொருள் வரதட்ச்சணைக் கொடுமையும் பெண்களின் அடிமை நிலையுமே ஆகும்.
இதை இப்பொழுது இங்கே பகிர காரணம் இணையத்தில் இன்று பார்த்த B.B.C ன்
India a Dangerous Place to be a woman என்ற ஒரு மணி நேர டாகுமென்ட்ரி. இந்த படத்தைப் பார்க்கையில் எனக்கு அந்த நினைவுகள் மீண்டெழுந்து வந்தன அதனால்தான்.. கீழே அதனுடைய வீடியோ லின்க் கொடுத்துள்ளேன் உங்கள் நேரத்தின் ஒரு மணித் துளியை நிச்சயம் நீங்கள் இதற்க்காக செலவு செய்யலாம் தவறொன்றும் இல்லை..