பக்கங்கள்

சிதறல் - 11

ஒரு கணம்
---------------

சமீபத்தில்
ஒரு புதிய கணமொன்றை
உணர்ந்து கொண்டேன்  - அதில்
நீ நானாகவும்
நான் நீயாகவும்
மாறியிருந்தோம்!
விழாத மழை
------------------

விழ மறுக்கும் மழையின்
முதல் துளியின்
வாசனைக்காய்
நிதமும் காத்திருக்கிறது
மனது.....இரகசியங்கள்
-------------------

திரைச்சீலையின்
சன்னலுக்குள்
மறைந்திருக்கும்
இரகசியங்களை,
கலங்கடித்துச் செல்கிறது
காற்று!


மாற்றம்
----------

இன்றைக்கிருந்து
நாளைக்காய்
மாறுவதைக் காண
காத்திருக்கிறேன்
வெகு நாட்களாய் -- ஆவலுடன்
ஆனால்,
எதையும்தான்
காணவில்லை.....


--பிரியா8 கருத்துகள்:

 1. மழையும் காற்றும் மிகவும் கவர்ந்தது...

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. விழாத மழை / ஒரு கணம் / இரண்டுமே மனதைக் கவர்ந்து இழுத்து விட்டன. அதற்காக மற்றவை இரண்டும் சரியில்லை என்பதல்ல அர்த்தம். அனைத்தும் நன்றே.

  பதிலளிநீக்கு
 3. பதில்கள்
  1. நன்றி சௌந்தர் சார்... மிக நீண்ட நாட்களுக்குப் பின் தளத்தில் காண்கிறேன்....

   நீக்கு
 4. இரகசியங்கள், மாற்றம் இரண்டும் சூப்பர்! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு