பக்கங்கள்

காலமாற்றம்

ஒரு மிகப்பெரிய
காத்திருப்பின் முடிவு
இத்தனை அழகாய்
இருக்குமென்று
நினைத்ததில்லை
ஒரு போதும்!

வசந்தகாலத்தின் குளுமையை
முற்றிலும் மறந்த
கோடைகாலத்தின் வெம்மையில்
புதுதளிர்களைக் குறித்து
நினைப்பதும் நடக்குமோ

இன்றோ
என் சோலையில்
லேசான வாடையுடன்
சின்னதாய்  தளிர்களும்

காலமாற்றங்கள்
தொடரட்டும் இப்படியே
இனியாகிலும்....
--பிரியா 

6 கருத்துகள்:

  1. மாற்றமில்லாத, வாழ்வு மட்டுமல்ல, உலகம்கூட போரடிக்கும் நண்பரே...

    - Killergee
    www.killergee.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. காலமாற்றத்தினைக் குறித்த கவிதை வெகு அழகு.

    பதிலளிநீக்கு